Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி அட்வான்ஸ், ஒரு மாத வாடகைதான்..!

 வாடகைக்கு குடியிருப்பவரா நீங்கள், உங்களுக்காகவே ஒரு குஷியான சேதி. இனி வீட்டு சொந்தக்காரர்கள் தங்கள் வீடுகளில் குடியிருப்பவர்களிடம் இருந்து ஒரு மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸாக பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் இஷ்டத்துக்கு வாடகையை ஏற்றுவதோடல்லாமல் மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதம் வரை அட்வான்ஸ் வசூலித்து வருகிறார்கள். இதனால் வாடகைக்கு குடியிருக்கும் பலர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், இனி வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸாக பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 
ஆனால், இது சரியான தீர்ப்பும் அல்ல, நடைமுறைக்கும் உகந்ததல்ல என்று வழக்கறிஞர் சஞ்சய் பின்டோ தெரிவித்துள்ளார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ