Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இந்திராதனுஷ்' திட்டம் - எந்த வங்கிக்கு எத்தனை கோடி?

பொதுத்துறை வங்கிகளைச் சீரமைக்க வேண்டி மத்திய அரசு 'இந்திராதனுஷ்' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தை இன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார்.
 
இந்த 'இந்திராதனுஷ்' திட்டத்தின் படி இந்தியாவிலுள்ள 13 பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த நிதி ஆண்டில் மொத்தம் ரூ. 20,058 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை மேம்படுத்தவே இந்த மூலதனத்தை  வழங்குகிறது. மேலும் ரூ. 5000 கோடியை அவற்றின் திறனை அடிப்படையாக வைத்து ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
இந்தத் திட்டம் மூலம், எஸ்பிஐ பேங்க் அதிகபட்சமாக 5,511 கோடி ரூபாயும், பேங்க் ஆஃப் இந்தியா 2,455 கோடி ரூபாயும் , பிஎன்பி 1732 கோடி ரூபாயும், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் 2009 கோடி ரூபாயும் பெற்றுக்கொள்கின்றன. 
 
மேலும் 'இந்திராதனுஷ்' திட்டத்தில், பதவிகள் நியமனம், இயக்குனர்கள் குழு, மூலதனமாக்கல், எளிமையாக்கம், அதிகாரம் வழங்குதல், நிர்வாக சீரமைப்பு மற்றும் பொறுப்புகளைத் திட்டமிடுதல் ஆகிய ஏழு விஷயங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன.
 
  இந்த திட்டத்தில் வங்கிப் பொறுப்புகளுக்கான நியமனங்களை முடிவெடுப்பதற்காக இயக்குனர் குழு ஒன்று உருவாக்கப்படுகிறது . அதன் உறுப்பினர்கள் 6 மாதத்திற்குள் நியமிக்கப்படுவார்கள். அந்தக் குழுவிற்கு ரிசர்வ் வங்கியின் கவர்னர் தலைமை தாங்குவார். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ