Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

42 டாலருக்கும் கீழ் இறங்கிய கச்சா எண்ணெய் விலை

 அமெரிக்க கச்சா எண்ணெயின் விலை கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து வர்த்தகமாகிறது. 


2009 மார்ச் மாதம் முதல் 42 டாலருக்கு குறையாமல் வர்த்தகமாகி வந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை தற்போது 42 டாலருக்கும் கீழ் குறைந்து வர்த்தகமாகிறது. ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்று 49.22 டாலராக குறைந்து வர்த்தகமாகிறது.


ஆசியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால், கச்சா எண்ணெக்கான தேவை குறைந்திருக்கிறது என்பதே இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெயின் சரக்கு தேங்கிவிடும் அச்சம் ஏற்பட்டுள்ளதால் அமெரிக்கா கச்சா எண்ணெயின் விலையைக் பெருமளவில் குறைத்துள்ளது.
இன்று பங்குச் சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்று இந்திய மதிப்பில் ரூ. 2742 க்கு வர்த்தகமாகியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ