Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழைய காருக்கு புது கார் வாங்கினால் ரூ. 1.5 லட்சம் சலுகை

சுற்றுச்சூழல் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதால் பழைய வாகனங்களைப் புதுப்பிக்கும் முயற்சியில், மத்திய அரசு ரூ.1.5 லட்சம் வரை சலுகை வழங்க திட்டமிட்டுள்ளது. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் வேலை வாய்ப்பை கணிசமாக உருவாக்கவும் இந்தத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை வெளியிட்ட மத்திய மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இது தொடர்பாக, தனது அமைச்சகத்தின் பரிந்துரை நிதி அமைச்சகத்திலிருந்து ஒப்புதல் கிடைக்க காத்திருப்பதாக கூறியுள்ளார். ஒப்புதல் கிடைத்தால் இச்சலுகை திட்டம் அமலுக்கும் வரும் என்று தெரிவித்துள்ளார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ