Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொத்த விற்பனை பணவீக்க விகிதம் 4.05 % குறைவு

 உணவு மற்றும் நுகர்வோர் பொருட்களின் விலை குறைந்து வருவதால் ஜூலை மாத மொத்த விற்பனை பணவீக்க விகிதம் 4.05%  ஆக குறைந்துள்ளது. 


கடந்த ஜூன் மாதத்தில், மொத்த விற்பனை பணவீக்க விகிதமானது 2.4% குறைந்திருந்தது. 
 
பொருட்களை உற்பத்தி செய்யும் செலவுகள் 1.47% குறைந்துள்ளது இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. 4.05% குறைந்துள்ள மொத்த விற்பனை பணவீக்க விகிதத்தில் உணவுப் பொருட்கள் விற்பனை பணவீக்க விகிதம் மட்டுமே 1.16% குறைந்துள்ளது. அதில் காய்கறிகளின் பணவீக்க விகிதம் 24.52% குறைந்துள்ளது. 
இந்த நிலையில் வங்கிகள், வரும் செப்டம்பர் 29ம் தேதி கூடும் ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்திற்கு முன்பே கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கும் என்று எதிர்பார்க்கின்றன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ