Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆடிட்டர் உதவியின்றி வரி கணக்கு தாக்கல் செய்ய முடியுமா?

நான் கான்ட்ராக்டர் தொழில் செய்து வருகிறேன். வருடத்துக்கு சுமார் ரூ.10 லட்சம் வரை டேர்னோவர் ஆகிறது. இதில் வருமான வரி, வணிக வரி, சேவை வரி கணக்கை தாக்கல் செய்ய ஆடிட்டர் செலவு மட்டும் ரூ.28,000 ஆகிறது. என்னால் ஆடிட்டர் உதவியின்றி தனியாக வரி கணக்கு தாக்கல் செய்ய முடியுமா?
பாலசுப்ரமணியம், பெங்களூரு.
எஸ்.ஸ்ரீகாந்த், ஆடிட்டர். பார்ட்டனர், கற்பகம் அண்ட் கோ.
‘உங்களின் டேர்னோவர் ரூ.1 கோடிக்கும் குறைவாக இருப்பதால், நீங்கள் வருமான வரி கணக்குக்காக ஆடிட்டிங் செய்துகொள்ள வேண்டி யதில்லை. டேர்னோவரில் 8 சத விகிதத்துக்கும் குறையாமல் லாபம் இருந்தால், உங்களின் கணக்கைப் பராமரிக்கக்கூட வேண்டியதில்லை. அதனால் உங்களுக்கு அக்கவுன்டன்ட் தேவையில்லை.
ஆன்லைன் வழியாகவே வரி கணக்கு தாக்கலை மேற்கொள்ள வருமான வரித் துறையே வசதி செய்து தந்துள்ளது. அதனால் நீங்கள் ஆடிட்டரின் உதவியின்றியே ஆன்லைனில் வரி தாக்கல் செய்ய முடியும். வரி கணக்கு தாக்கல் செய்யும்போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப் பட்டத் துறையின் பிஆர்ஓ அலுவலகத்தில் இலவசமாக ஆலோசனை பெற முடியும்.’
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close