Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்எஸ்இ பங்குகளை பிஎஸ் இயில் விற்க முடியுமா?

 நான் ஆன் லைனில் பங்கு வர்த்தகம் செய்து வருகிறேன். தேசிய பங்குச் சந்தை மூலம் வாங்கிய பங்குகளை மும்பை பங்குச் சந்தை மூலமாக விற்க முடியுமா?

ஜான் பால்.
எஸ்.லெட்சுமணராமன், பங்குச் சந்தை நிபுணர்.
‘‘தேசிய பங்குச் சந்தையில் வாங்கிய பங்குகளை மும்பை பங்குச் சந்தையில் விற்பதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால், இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன.
1. நீங்கள் வாங்கிய பங்குகள் உங்க ளுடைய டீமேட் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. உங்களின் பங்கு தரகர் மும்பை பங்குச் சந்தையிலும் உறுப்பினராக இருக்க வேண்டும். அவரிடம் உங்களுக்கு ஒரு வர்த்தகக் கணக்கும் இருக்க வேண்டும்.’
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP