Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிசிஎஸ், ரிலையன்ஸை முந்தியது இந்தியன் ஆயில்

 2015-16 நிதி ஆண்டின் ஜூன் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அதிகம் லாபம் ஈட்டிய நிறுவனங்கள் பட்டியலில் டிசிஎஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களை முந்தியுள்ளது இந்தியன் ஆயில். 


கடந்த இரண்டு வருடங்களாக முதலிடத்தில் இருந்த ரிலையன்ஸை கடந்த டிசம்பர் காலாண்டில் டிசிஎஸ் முந்தியது. ஆனால் 2015-16 நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தை முந்தி இந்தியன் ஆயில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜூன் காலாண்டில் ஐஓசி நிறுவனத்தின் நிகரலாபம் 6,436 கோடி ரூபாய். இதன் சுத்திகரிப்பு வரம்பு ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததுதான் அதன் நிகர லாபம் அதிகரித்ததற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. 


இந்தியன் ஆயில், ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தை விட 118 கோடி ரூபாய் அதிக லாபம் ஈட்டி இருக்கிறது. டிசம்பர் காலாண்டிலேயே ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபத்தை ஐஓசி நெருங்கியது. இப்போது முந்தி விட்டது.
ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் நிகர லாபம், 6318 கோடி ரூபாய், மூன்றாவது இடத்திலுள்ள டிசிஎஸ் நிகர லாபம் 5,684 கோடி ரூபாய்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ