Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கி பங்குகளின் விலை அதிகரிப்பு!

 பேங்க் ஆஃப் பரோடா பங்கின் விலை இன்று (17.08.2015) காலையிலிருந்து சுமார் 10 சதவிகிதத்துக்கு மேல் விலை அதிகரித்துள்ளது. அதாவது பங்கின் விலை 22 ரூபாய் விலை அதிகரித்துப் பிஎஸ்இ சந்தையில் 206.60க்கு வர்த்தகமாகி வருகிறது.


இந்த விலை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம்  முக்கியப் பொதுத் துறை வங்கிகளுக்கு சிஇஒகள்  நியமிக்கப்பட்டிருப்பதும், 20 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனமாகச் செலவுகளுக்காக விரைவில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதும் ஆகும். .

இதன் காரணமாக முக்கிய வங்கி பங்கிகளின் விலையும் அதிகரிக்க துவங்கியுள்ளது. கனரா பேங்க் 9 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. ஐடிபிஐ வங்கி பங்கி விலை 4 மேல் சதவிகிதத்துக்கு, எஸ்பிஐ 3 சதவிகிதத்துக்கு மேல், இந்தியன் ஒவர் சீஸ் வங்கி 4 சதவிகிதத்துக்கு மேல் ஆந்திரா பேங்க் 3.5 சதவிகிதத்துக்கு மேல் விலை அதிகரித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close