Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பருவகால நோய்கள்: மருத்துவ செலவுகளைக் குறைக்க ஹெல்த் இன்ஷூரன்ஸ்

பருவகால மாற்றங்களின் போது பெரும்பாலானோர்க்கு, வைரஸ் காய்ச்சல், டெங்கு, மலேரியா, ஆஸ்துமா போன்ற நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அந்தச் சமயங்களில் தரமான மருத்துவத்தைப் பெற அதிகளவில் செலவு செய்ய வேண்டி வரலாம். அதற்கான மருத்துவச் செலவுகளால் வரும் நிதிச் சுமைகளைத் தவிர்க்க சரியான ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். 
இது குறித்து பஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரிவின் தலைவர் சுரேஷ் சுகதனிடம் கேட்டோம்.
 
"அவர் விபத்து ஏற்பட்டாலோ அல்லது நாள்பட்ட கடுமையான நோய்கள் இருந்தாலோ மட்டும்தான் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்ற மனநிலையில்தான் பெரும்பாலானோர் இருக்கிறோம். ஆனால் எதிர்பாராத மருத்துவ செலவுகளை சமாளிக்கவும் இன்ஷூரன்ஸ் கைக்கொடுக்கும் என்பதை நம்மில் பலரும் மறந்து விடுகிறோம்" என்று பேச ஆரம்பித்தார்.  
 
முதலில் கவனம்
 
கோடைக்காலம் முடிந்து, மழைக் காலம் ஆரம்பித்ததுமே கொசுக்களும் அதிகமாகிவிடும். பலருக்கு மழைக் காலத்தில் காய்ச்சல், சளி போன்ற பிரச்னைகள் வருவது சாதாரணம்தான். அதற்கெல்லாம் மருத்துவமனைக்குப் படையெடுக்கத் தேவையில்லை. ஆனால் சில நேரங்களில் இந்த சாதாரணப் பிரச்னைகள் நீடித்தால் வேறு எதோ பிரச்னை என்பதை உணர வேண்டும். அதற்கு உடனடியாக அருகிலுள்ள மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும்.
 
எப்போது இன்ஷூரன்ஸ் அவசியம்?
 
மருத்துவரை அணுகி ஆலோசித்த பிறகு, சாதாரண காய்ச்சல் சளிதான், இந்த மருந்துகளை மட்டும் சாப்பிடுங்கள் சரியாகி விடும் என்றால் பிரச்னையில்லை. மகிழ்ச்சியாக வீட்டிற்குப் போய் கொடுத்த மருந்துகளை சரியாக சாப்பிட்டுவிட்டு தூங்கி எழுந்தால் சரியாகிவிடும்.  
 
ஒரு வேளை துரதிஷ்டவசமாக டைஃபாய்டு, மலேரியா, டெங்கு, ஆஸ்துமா போன்ற நோய்கள் இருப்பது தெரிய வந்தால் என்ன செய்வது? ஒரு பல்நோக்கு மருத்துவ மனைக்கு நீங்கள் வைரஸ் காய்ச்சல், தொற்றுக்குப் போனாலே ஆகும் செலவு, ரூ. 45,000 முதல் ரூ. 50,000 வரை, நீரினால் பரவும் டெங்கு, காலரா போன்ற நோய்களுக்கு ரூ. 35,000 முதல் ரூ. 40,000 வரை நுரையீரல் சார்ந்த நோய்களுக்கு ரூ. 60,000 முதல் ரூ. 65,000 வரை ஆகின்றன.
 
இப்படி மருத்துவ செலவுகள் மலையளவு உயர்ந்து கொண்டிருக்கும் வேலையில், நோய்க் காரணமாக விடுமுறை எடுக்கும் போது சம்பளத்தில் பணம் குறையும். இப்படியான சூழ்நிலையில் மாத பட்ஜெட்டில் குடும்பத்தை நடத்தும் நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள். அப்போது உங்களுக்கு கை கொடுப்பதற்காகவே இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ்கள் தேவைப்படுகின்றன. இந்தக் காரணங்களுக்காகதான் மழைக்காலத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ்கள் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
 
 
சரியான ஹெல்த் இன்ஷூரன்ஸ் எப்படி தேர்ந்தெடுப்பது:
 
பெரும்பாலான இன்ஷூரன்ஸ்கள், வேலை பார்க்கும் நிறுவனங்கள் தருவதாகவே இருக்கின்றன. ஆனால் மிகச் சிலரே ஹெல்த் இன்ஷூரன்ஸ்களை முன்கூட்டியே எடுத்து வைத்திருக்கிறார்கள். ஏராளமானோர் எந்த ஹெல்த் இன்ஷூரன்ஸுமே எடுப்பதில்லை. இதற்கு நோயின் விளைவுகள் குறித்த அவர்களது அறியாமையும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் குறித்து முடிவெடுக்க தாமதிப்பதும்தான் காரணமாக உள்ளன. 
- நிதி மேலாண்மை, முதலீடு ஆகியவை போலவே, இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கான சரியான வயது 25 முதல் 35 வயது வரை. இளமையில் விதைத்தால், தேவைப்படும் போதும் முதுமையிலும் கவலையில்லாமல் அறுவடை செய்யலாம். 
- ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று கவரேஜ்கள் குறித்த விவரங்கள், மற்றொன்று யாரிடம் இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம். 
 
- நீங்கள் தேர்ந்தெடுக்கும் இன்ஷூரன்ஸ், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போதும் சிகிச்சைக்குப் பின்னரும் என்னென்ன கவரேஜ்களைக் கொடுக்கின்றன என்று பாருங்கள். 
 
- இன்ஷூரன்ஸ் க்ளெய்மில் உள்ள வரம்புகள், விதிவிலக்குகள் மேலும் க்ளெய்ம் செய்வதற்கான வழிமுறைகள் எளிதாக உள்ளதா போன்றவற்றை கவனிக்கவும்.
 
குறைவான ப்ரீமியம் சரியான க்ளெய்ம்: 
 
இன்று இந்த நோய்க்கு இந்த இன்ஷூரன்ஸ் என்றளவுக்கு கவரேஜ்கள் வர ஆரம்பித்துவிட்டன. குறிப்பிட்ட நோய்களுக்கெனவே, குறைவான ப்ரீமியம்களில் தனியாக ஹெல்த் கவரேஜ்கள் வழங்கப்படுகின்றன. 
 
உதாரணத்திற்கு பஜாஜ் அலையன்ஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸில் "ரூ.650 ரூபாய் என்ற ப்ரீமியமில், டெங்கு, மலேரியா, காலரா, டைஃபாய்டு போன்ற மழைக்கால நோய்களுக்கு ரூ. 50,000 வரையிலான க்ளெய்ம்கள் கிடைக்கிறது." 
 
சரியான ஹெல்த் இன்ஷூரன்ஸ் கவரேஜ்களைத் தேர்ந்தெடுத்தால் மருத்துவ செலவுகளை மறந்துவிட்டு மகிழ்ச்சியாக வாழலாம். 
 
ஜெ.சரவணன்
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ