Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்.சி.டி வெளியீடு: சிறு முதலீட்டாளர்களின் கவனத்திற்கு!

 ஆர்வமுள்ள சிறு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவே பட்டியலிடப்படாத பல நிறுவனங்கள், மாற்றவியலாத மற்றும் மாற்றதக்க கடன் பத்திரங்கள் (என்சிடி) / மாற்றவியலாத மற்றும் மாற்றதக்க பங்குகள்/ஈக்குவிட்டிகளை, நிறுவனங்கள் விதிமுறைகள் சட்டம் 1956 மற்றும் செபியின் விதிமுறைகள் சட்டங்களின் படியும் செயல்படாமல் "தனிப்பட்ட ஒதுக்கீடு" என்ற போர்வையில் முறைகேடாக வர்த்தகம் செய்து வருகின்றன. 

 

50 அல்லது அதற்கும் மேலானவர்களுக்கு பங்குகள் பரிமாற்றம் செய்யப்படும்போது, அதனை  நிறுவனங்கள் விதிமுறைகள் சட்டம் 1956இன் கீழ் "பொதுமக்களிடம் திரட்டும் நிதி"ஆக இணைக்க வேண்டும். 
 
நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ் “தனிப்பட்ட ஒதுக்கீடு” பட்டியலில், அழைப்பு விடுக்கப்படும் போதே ஒரு நிறுவனம் தன் பெயரை அதிகாரபூர்வமாக அதில் இணைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு தனிப்பட்ட ஒதுக்கீடுகளில், பொதுவான எந்த விளம்பரமோ, எந்தவொரு ஊடகங்களைப் பயன்படுத்தியும் விநியோகம் செய்வதோ, பரப்புவதோ கூடாது. அதே போல் ஒரு நிதி ஆண்டில் 200க்கு மேல் ஒரே ஒரு நபரைக் கூட சேர்க்கக் கூடாது. 
 
நிறுவனங்களின் விதிமுறைகள் சட்டம், 2013 மற்றும் செபியின் ஒழுக்க விதிகள் ஆகியவற்றின் படி, இந்த பங்குகளை, அங்கீகரிக்கப்பட்ட பங்கு வர்த்தக நிறுவனத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றாலொழிய, பொதுவில் வர்த்தகம் செய்ய யாருக்கும் அனுமதியில்லை. இதற்கு ஆர்ஓசி பங்கு பரிவர்த்தனை நிறுவனம்/செபி உள்ளிட்டவர்களுக்கு அனுமதி கேட்டு பதிவு செய்ய வேண்டும். அந்த வழங்கல் நிறுவனம் தன்னைப் பற்றிய விவரங்கள், நிறுவன மேம்பாட்டாளர்கள் மற்றும் ரிஸ்க் காரணிகள் ஆகியவற்றையெல்லாம் தெரிவிக்க வேண்டும்.
 
மேற்சொன்ன விதிமுறைகளைப் பின்பற்றாத மொத்தம் 193 நிறுவனங்களுக்கு எதிராக செபி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. 
 
அந்தப் பட்டியலில் சஹாரா ரியல் எஸ்டேட், சுரக்‌ஷா அக்ரோடெக் இண்டஸ்ட்ரீஸ், சிலிகான் ப்ராஜக்ட்ஸ், மதுரை ரூரல் டெவலப்மென்ட் ட்ரான்ஃபர்மேஷன் இண்டியா,  டொர்சா அக்ரோ ப்ராஜக்ட்ஸ் லிட், ஃபிஷர்மென் டெவலப்மன்ட் மைக்ரோ ஃபினான்ஸ் லிட் ஆகியவை அடங்கும். 
 
மற்ற நிறுவனங்கள் கீழே உள்ள லிங்க்கில் தரப்பட்டுள்ளன.
சிறு முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் தாங்கள் முதலிடும் நிறுவனத்தின் தனிப்பட்ட ஒதுக்கீடு பதிவு ஆவணம், பங்கு பரிவர்த்தனை நிறுவனங்களின் செபி பட்டியலில் இடம்பெற்றுள்ளதா? போன்றவற்றை பார்த்துவிட்டு முதலீடு செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை செய்துள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ