Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று பிற்பகல் வாட்ஸ்-அப்பில் ஷேர்லக் அனுப்பியிருந்த தகவல்கள் இனி

 சர்வதேச முதலீட்டாளர் மாநாடு!

 

வருகிற செப்டம்பர் மாதம் 9, 10 தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை நடத்த முடிவு செய்து அதற்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. இதற்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நாளை நடக்கிறது. தமிழக நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, இந்த மாநாட்டின் முக்கிய விஷயங்களை எடுத்துச் சொல்லப் போகிறார்.
 
ஆனால், இந்த மாநாடு பற்றி தொழில் துறை வட்டாரத்தில் பலருடன் பேசிப் பார்த்தேன். பலரும் அதிருப்தியுடன் இருக்கிறார்கள். ஏற்கெனவே இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட இந்த மாநாட்டை இப்போது வேறு வழியில்லாமல்தான்  தமிழக அரசாங்கம் நடத்துவதாக சொல்கிறார்கள். சமீப காலமாக முக்கிய கூட்டங்களில்தான் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க முதல்வர் ஜெயலலிதா வருவாரா என்கிற கேள்விக்கு பதில் இல்லை.பிற மாநிலங்களில் இப்படி ஒரு மாநாடு நடத்தும்போது, அந்த மாநில முக்கிய அமைச்சர் ஒருவர் வேறு மாநிலங்களுக்கு சென்று, 'எங்களின் மாநிலத்துக்கு வந்து தொழில் தொடங்குங்கள்! உங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம்' என்று பிற மாநில தொழிலதிபர்களை அழைப்பார்கள். ஆனால், தமிழகத்திலிருந்து ஏதாவது ஒரு அமைச்சர் வேறு மாநிலத்துக்கு போய் அழைப்பு விடுப்பாரா என்பது தெரியவில்லை.
 
தவிர, ஏற்கெனவே தொழில் செய்ய தமிழகத்துக்கு வருகிறவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை  என்று சொல்கிறார்கள். தொழில் நிறுவனங்களுக்கு மின் தட்டுப்பாடு என்பது தீராத பிரச்னையாக இருக்கிறது.தண்ணீர் வசதி, சாலை வசதி போன்றவற்றிலும் பெரிய முன்னேற்றம் இல்லை. தவிர, வேலை ஆட்கள் கிடைப்பதும் குதிரைக்கொம்பாக இருக்கிறது.
 
இத்தனை கஷ்டங்களையும் தாண்டி தொழில் செய்ய வருகிறவர்களிடம்  கணிசமாக 'எதிர்பார்'கிறார்கள் சிலர். சிவாஜி படத்தில் வருகிற மாதிரி முதலில் புராஜெக்ட் மதிப்பைக் கேட்கிறார்களாம். அதில 40 சதவிகிதத்தை முதலில் தந்துவிடச் சொல்கிறார்களாம். இதனைக் கேட்டவுடனே தொழில் தொடங்க தேடி வந்தவர்கள்கூட வேறு மாநிலங்களுக்கு ஓடிப் போய்விடுகிறார்கள் என்பதே விஷயம் தெரிந்தவர்களின் ஆதங்கம். இந்த நிலைமையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கப் போகிறது. இந்த மாநாட்டின் மூலமாவது தொழில் துறைக்கு இணக்கமான ஒரு சூழ்நிலை பிறந்தால், எல்லோருக்கும் சந்தோஷம்தான்!
 
சர்ச்சைக்குள்ளான வங்கி நியமனங்கள்! 
 
இந்திராதனுஷ் திட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு 20,000 கோடி ரூபாய்க்கு மேல் புதிய மூலதனம் தரும் செய்தியால் வங்கிப் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. தனியார் நிறுவனத்தை சேர்ந்த இருவர் இரண்டு பொதுத் துறை வங்கிகளின் உயர்பதவிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.
 
இதை பங்குச் சந்தை சமூகம்  வரவேற்றிருந்தாலும் வங்கி வட்டாரத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தனியார் துறை வட்டாரத்திலிருந்து ஆட்களை வங்கிக்கு நியமித்தால், அது அரசியல் நியமனமாக போய்விடும். இதனால் வங்கிக்கு இருக்கும் நல்ல பெயர் பாதிப்படையும் என்று அவர்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இனி எந்த வங்கிக்கும் தனியார் துறையிலிருந்து உயர்பதவிக்கு நியமிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசாங்கம் விளக்கம் தந்திருக்கிறது. 
 
ஒரு வரித் தகவல்கள்!
 
* இன்று நிஃப்டி 0.48% இறங்கி இருந்தாலும் சிஎன்எக்ஸ் பிஎஸ்யூ நிஃப்டி 6.19% உயர்ந்திருக்கிறது. ஏறக்குறைய  216 புள்ளிகள் உயர்ந்து 3699 புள்ளிகளை எட்டி இருக்கிறது!
* அமரராஜா நிறுவனம் கடந்த ஆண்டைவிட 15% அதிக லாபம் தந்திருக்கிறது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 106 கோடி ரூபாய் லாபம் கண்டது. இந்த ஆண்டு 122 கோடி லாபம் கண்டிருக்கிறது. இதனால் பங்கு விலை இன்று 8% உயர்ந்து, 1052 ரூபாயை எட்டி இருக்கிறது.
* ஒஎன்ஜிசி நிறுவனம் முதலாம் காலாண்டில் சுமாரான ரிசல்ட் காரணமாக கடந்த 22 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதன் பங்கு விலை குறைந்திருக்கிறது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ