Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்பிஎஸ் தொடர்பான ட்விட்டர் கேள்வி-பதில் !

இன்று ( 19.08.2015) நாணயம் விகடன்  ட்விட்டர்  கேள்வி-பதில் பகுதியில்  நியூ பென்ஷன் சிஸ்டம் ( என்பிஎஸ்) சம்பந்தமான  சந்தேகங்களுக்கு  பதில் அளித்தார்  நிதி ஆலோசகர்  வி.சங்கர்


 நியூ பென்ஷன் சிஸ்டம் ( என்பிஎஸ்)  சம்பந்தமான உங்கள்   சந்தேகங்களுக்கு உங்களது ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வியை #AskNV என்று ட்விட் செய்து பதில் பெறுங்கள் என அறிவித்திருந்தோம். அதன்படி வந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே உங்களுக்காக.

1. என்பிஎஸ் (நியூ பென்ஷன் சிஸ்டம்) திட்டத்தில் 80சி மற்றும் 80சிசிடி பிரிவுகளில் வரி விலக்கு பெற எப்படி முதலீடு செய்வது என்று தெரியவில்லை. விளக்கவும்?


நீங்கள் என்பிஎஸ்- ல் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு அதற்கான 80சி சான்றிதழ் தரப்படும். அதைக் காட்டி வரி விலக்கு வாங்கிக் கொள்ளலாம். 
80சிசிசி என்பது இன்ஷூரன்ஸ் நிறுவனம் மூலமாக இன்வெஸ்ட் பண்ணக்கூடியது. 80சிசிடி என்பிஎஸ் மூலம் முதலீடு செய்வது. கடந்த வருடத்தில் இந்த மூன்று முதலீட்டிலும் ஒன்றரை லட்சம் வரை முதலீடு செய்திருக்கலாம். 80 சிசிடி யில் 50,000 வரை முதலீடு செய்யலாம். 

நடப்பு 2015-16 நிதி ஆண்டில் 80 சிசிடியில் 50 ஆயிரம் அதிகபட்சமாக முதலீடு செய்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. மேலே கூறப்பட்ட மூன்றும் சேர்த்து ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

80சிசிடி யில் முதலீடு செய்ய 8 பென்ஷன் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பாயின்ட் ஆஃப்  ப்ரெசன்ஸ்-சர்வீஸ் புரொவைடர் (பிஓபி-எஸ்பி)  இவர்களை அணுகி  விண்ணப்பம்  பெற்று,  உங்களுக்கு எவ்வளவு முதலீடு  செய்ய வேண்டுமோ எழுதி கொடுத்தால் உங்களுக்கென ஒரு எண்  ஒதுக்கி, முதலீட்டை ஆரம்பிப்பார்கள். அவர்கள் தரும்  ஆதாரத்தை ப்ரூஃபை வைத்து வரிவிலக்கு பெறலாம்.. 

2. நான் என்பிஎஸ் முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்புகிறேன் ஆட்டோ சாய்ஸ்சிலிருந்து ஆக்டிவ் சாய்ஸ்க்கு மாற்றிக் கொள்ள யாரை அணுக வேண்டும்? 

நீங்கள் ஆரம்பத்தில் கணக்கு தொடங்கிய பிஓபி-எஸ்பி யை அணுகி என் சாய்ஸ்-ஐ மாற்ற வேண்டும் என்று சொன்னால்,  அவர்கள் அதற்கு தகுந்தாற்போல 50 % ஈக்விட்டியில் முதலீடு செய்யும் திட்டங்கள் இருக்கிறது. அதற்கு நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். அதற்கான ஒப்புகை  உங்களுக்கு தரப்படும். அதை நீங்கள் ஆவணமாக வைத்துக்கொள்ளலாம்
 
3. என் அடிப்படை சம்பளத்தில் 10%ஆன ரூ. 3700 ஐ மாதா மாதம் என்பிஎஸ்-ல் முதலீடு செய்கிறேன். மேலும் வரி விலக்கு பெற என்பிஎஸ் - ல் நான் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் 

உங்களுடைய சம்பளத்திலோ அல்லது நீங்கள் செய்யும் தொழில் மொத்த வருமானத்திலோ 10% தொகைக்கு மட்டுமே வரி விலக்கு கிடைக்கும். அதற்கு மேல் வரிவிலக்கு கிடைக்காது. சம்பளம் மற்றும் வருமானத்தில் 10% தாண்டி முதலீடு செய்யும் வாய்ப்பு இல்லை. கூடுதலாக உங்களுடைய  நிறுவனம் முதலீடு செய்யும் பென்ஷன் தொகை  இருந்தால் அதிலும் 10% தொகைக்கு வரிவிலக்கு கிடைக்கும். 

4. என்பிஎஸ் திட்டத்தில் சேர்ந்த பிறகு முதலீட்டு பிரிவுகளை மாற்றம் என்ன செய்ய வேண்டும்?

எந்த மாற்றம் செய்ய விரும்பினாலும் பிஓபி-எஸ்பி அணுக வேண்டும். உங்களுடைய முதலீட்டுக்கான ஆதாரத்தை எடுத்துச் சென்று அவர்களை அணுகினால்  மாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.
 
5. 58 வயதுக்குப் பிறகு எத்தனை வருடங்களுக்கு பென்சன் கிடைக்கும்?பென்ஷன் காலத்தில் இடையில் இறந்துவிட்டால், நாமினி மீதமுள்ள பென்ஷன் தொகையை மொத்தமாகப் பெறமுடியுமா?

60 வயது வரை மட்டுமே என்பிஎஸ் பென்சன் கிடைக்கும். பின்னர் உங்களுடைய அக்கவுன்ட் குளோஸ் செய்யப்படும். அப்போது வரும் கார்பஸ் தொகையில் 40% வரை ரொக்கமாக பெற்றுக் கொள்ள முடியும். மீதமுள்ள 60% தொகையை என்பிஎஸ் பரிந்துரைத்துள்ள 6 இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் எந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களோ அதில் முதலீடு செய்யலாம். அதன் மூலம் உங்களுக்கு மாதா மாதம் கணிசமான தொகைக் கிடைக்கும் 
உதாரணமாக எல்.ஐ.சியில் 7 விதமான ஆன்னுட்டி வருமான விதங்கள் உண்டு. 
உதாரணமாக 60 வயதில் 1,00,000 லட்சம் நீங்கள் எல்.ஐ.சி  திட்டத்தில் முதலீடு செய்தால் 
1. அவர்கள் ஒவ்வொரு மாதமும் கிடைக்கக்கூடிய 745 ரூபாய். அதற்கு பிறகு நபர் வாழ்கிற காலம் வரை இந்தத் தொகை கிடைக்கும். ஒருவேளை இடையில் இறந்துவிட்டால் எந்த தொகையும் தரப்படாது.
2. 15 வருடம் வரை நிச்சயமான பென்சன். 15 வருடத்திற்கு பிறகு வாழ்ந்தாலும் கிடைக்கும். 15 வருடத்திற்குள் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உங்களுடையக் குடும்பத்திற்கு 15 வருடம் வரை பென்சன் கிடைக்கும். 
3. அவர் காலம் முடியும் வரை 566 ரூபாய் பென்சன் தொகையாக கிடைக்கும். அவர் காலம் முடிந்த பிறகு அவர் கட்டிய அந்த ப்ரீமியம் தொகையான 1 லட்சம் அவரது குடும்பத்திற்கு கிடைக்கும். 
4. முதல் வருடம் மாதத் தொகையாக 604 ரூபாய். அடுத்தடுத்த வருடங்களில் இந்தத் தொகையில் 3% அதிகம் கூடுதலாக கிடைக்கும். இருக்கிற காலம் வரை கிடைக்கும்
5. அவர் இருக்கிற காலம் வரை ரூ. 691 ரூபாய் கிடைக்கும், அவர் இறந்துவிட்டால் அவரது மனைவிக்கு இந்தத் தொகையில் பாதி மாதா மாதம் கிடைக்கும். 
6. நபர் இருக்கும் வரையிலும் சரி, அவரது மனைவி இருக்கும் காலம் வரையிலும் 644 ரூபாய் மாதா மாதம் கிடைக்கும்
7. அவருக்கும் அவரது மனைவிக்கும் 562 ரூபாய் மாதா மாதம் கிடைக்கும், இருவரும் இறந்துவிட்டால் வாரிசுகளுக்கு அவருடைய ப்ரீமியம் தொகை அப்படியே கிடைக்கும்.
 



6. என்பிஎஸ் திட்டத்தில் முதலீட்டுத் தொகையை இடையில் அதிகரிக்க முடியுமா?

என்பிஎஸ் திட்டத்தில் டயர் 1 மற்றும் டயர் 2 இரண்டு திட்டங்கள் உண்டு. இதில் டயர் 2இல் நீங்கள் தொகையை அதிகரிக்கவும் குறைக்கவும் முடியும். 

7. நிரந்தர வருமானம் கிடையாது. நான் என்பிஎஸ் திட்டத்தில் சேர முடியுமா?

என் பிஎஸ்ஸில் மாதா மாதம் பணம் கட்டுவது கட்டாயம். அதனால் இப்போதைக்கு என்பிஎஸ் சில் நிங்கள் விரும்பும் வாய்ப்பு இல்லை.

8. என்னுடைய 22 வயதிலிருந்து, மாதம் 2500 ரூபாய் முதலீடு செய்தால், 58 வயதுக்குப் பிறகு எனக்கு எவ்வளவு ரூபாய் பென்ஷன் கிடைக்கும்?

மாதா மாதம் 2500 ரூ கட்டினால் 288 மாதங்கள் (24 வருடங்கள்) மாதா மாதம் ப்ரீமியம் கட்டினால், வருடத்திற்கு 10% வருமானம் கிடைக்குமேயானால் அவர் ரிட்டையர் ஆகும் போது கிடைக்கும் கார்பஸ் தொகையின் அளவு 29,99,000 ரூபாய். 
இந்தத் தொகையை வைத்து ஆன்னுவிட்டி வாங்கினால் 240 மாதங்கள் (20 வருடங்கள்)க்கு 6% வட்டி விகிதம் கிடைக்குமேயானால் மாதா மாதம் 21,500 ரூபாய் கைக்கு கிடைக்கும், இதுவே வட்டி விகிதம் 8% கிடைக்குமேயானால் மாதா மாதம் கிடைக்கும் தொகை 25,500 ரூபாய்.

9. என் வயது 36.  என்பிஎஸ் -ல் என்ஆர் ஐக்கள் முதலீடு செய்ய முடியுமா?  என்பிஎஸ், மியூச்சுவல் ஃபண்ட் எந்த முதலீடு நல்லது? 


1. என்பிஎஸ்ஸில், என்.ஆர்.ஐ பணியாளர்கள் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு கே.ஒய்.சி ஆவணத்தை தெளிவுபடுத்தினால் நீங்கள் முதலீடு செய்யலாம். என்பிஎஸ்ஸில் முதலீடு செய்யும் பட்சத்தில் உங்களால் 60 வயதில் மட்டுமே அந்தத் தொகையை எடுக்க முடியும் என்பதால், நீண்ட கால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை விட அதிக தொகை கிடைக்கும்.
2. மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டை விட என்பிஎஸ்ஸில் செலவு தொகை (எக்ஸ்பென்ஸ் ரேஷியோ) மிகவும் குறைவு என்பதால், என்பிஎஸ் திட்டத்தில் அதிகத் தொகை முதலீட்டு தொகையாக இருக்கும். அதன் மூலம் நீண்டகால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை விட அதிக தொகை வருமானமாக கிடைக்கும்.

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ