Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐபிஓ மூலம் ரூ. 16,000 கோடி நிதி திரட்ட திட்டம்

பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் ரூ. 16 ஆயிரம் கோடி நிதியைத் திரட்ட 30 நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்கான அனுமதி ஏற்கனவே 19 நிறுவனங்கள் வாங்கிவிட்டன.


இந்த 30 நிறுவனங்களும் தங்களுடைய விரிவாக்க நடவடிக்கைகளுக்காகவும், கடன் சுமையைக் குறைக்கவும் தேவையான நிதித் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக பொதுப் பங்கு வெளியீடு மூலம் மக்களிடமிருந்து நிதித்திரட்ட திட்டமிட்டுள்ளன. இதன் இலக்கு 16,000 கோடி ரூபாய்.
இந்நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் ஏற்கெனவே செபியிடம் அனுமதி பெற்றுவிட்டன. மேலும் 8 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதற்கான தகவல் குறிப்புகளைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளன.


பொதுப்பங்கு வெளியீட்டில், முதலிடும் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்க பல்வேறு விதிமுறைகளைக் கொண்டு வருகிறது செபி. அதன்படி நிறுவனங்களைப் பட்டியலிடும் காலத்தைப் பாதியாகக் குறைத்துள்ளதோடு மனுக்களை பரிசீலிக்கும் காலமும் குறைக்கப்பட்டுள்ளது.


2015-ம் ஆண்டில் இதுவரை 25 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதற்கான ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளன. இதே காலகட்டத்தில் 25 நிறுவனங்கள் தங்கள் நிறுவன பங்கு விற்பனைக்கு அனுமதி கோரியுள்ளன. இவற்றில் சில நிறுவனங்களின் மனுக்கள் கடந்த ஆண்டு நிலுவையில் இருந்தவையாகும். இப்போது செபியிடம் 8 நிறுவனங்களின் வரைவு விண்ணப்பங்கள் நிலுவை யில் உள்ளதாகத் தெரிகிறது.


2015ஆம் ஆண்டில் இதுவரையில் 10 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.4,700 கோடியைத் திரட்டியுள்ளன. முந்தைய இரண்டு ஆண்டுகளில் ஐபிஓ மூலம் திரட்டப்பட்ட நிதியைக் காட்டிலும் இது அதிகமாகும்.


மேட்ரிக்ஸ் செல்லுலர், கத்தோலிக் சிரியன் வங்கி, அல்கீம் லேபாரட்டரீஸ், எஸ்ஹெச் கேல்கர் அண்ட் கம்பெனி, அமர் உஜாலா பப்ளிகேஷன்ஸ், இன்ஃபிபீம் இன்கார்ப்பரேஷன், ஏஜிஎஸ் டிரான்ஸாட் டெக்னாலஜீஸ், நியூமரோ யுனோ குளோத்திங், பரன்ஜாபே கட்டுமான நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்கள் பொதுப்பங்கு வெளியிட காத்திருக்கும் பிற நிறுவனங்களாகும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP