Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆக்டிவா, 1 கோடியைத் தாண்டி விற்பனை

இந்தியாவின் பிரபல மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனமான ஹோண்டாவின் ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை 1 கோடியைத் தொட்டது. இதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளது ஹோண்டா. 

2001இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா ஆக்டிவா, கியர் லெஸ் 4 ஸ்டோர்க் இன்ஜின் வடிவமைப்பைக் கொண்டது. முதல் வருடத்திலேயே 55,000 ஆக்டிவாக்கள் விற்று விற்பனையில் வெற்றிபெற்றது.
 
கடந்த 2014-15 நிதி ஆண்டில் அதன் மொத்த விற்பனை 21 லட்சம். ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டாவின் சந்தை மதிப்பு மட்டுமே 59% என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்போது விற்பனை 1 கோடியைத் தாண்டியுள்ளது குறித்து இந்நிறுவனத்தின் சீஇஓ கெய்டா முராமாட்சு கூறுகையில், "இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனையின் போக்கையே மாற்றியுள்ளது எங்களது ஹோண்டா ஆக்டிவா. இதன் மூலம் 1 கோடி குடும்பங்களை மகிழ்வித்துள்ளோம் என்பது பெருமையாக உள்ளது" என்றார். 

"இந்தியாவில் ஸ்கூட்டருக்கான சந்தை மந்தமாகி வந்த போது, அறிமுகப்படுத்தப் பட்டது ஹோண்டா ஆக்டிவா. அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே 55,000 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்றதால், அனைத்து நிறுவனங்களும் ஸ்கூட்டர்களை மீண்டும் தயாரிக்கவும் விற்கவும் துவங்கின. ஆனால் விற்பனையில் ஹோண்டா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது" இவ்வாறு இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவின் துணை தலைவர் யாத்விந்தர் சிங் தெரிவித்தார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ