Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்.ஐ.சியின் புதிய 'யூலிப்' பாலிசி

இந்தியாவின் மிகப்பெரிய இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி புதிய 'யூலிப்' இன்ஷூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்து உள்ளது. 
 
19 மாதங்களுக்குப் பிறகு தனது புதிய யூலிப் இன்ஷூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்தி உள்ளது. இன்ஷூரன்ஸ் மற்றும் முதலீடு இரண்டும் இணைந்தது இந்த பாலிசி. 
இந்த புதிய என்டோவ்மென்ட் ப்ளஸ் பாலிசியின் ப்ரீமியம் ஒதுக்கீட்டு கட்டணம், முதல் ஆண்டில் 7.5% சதவிகிதத்திலிருந்து, மூன்றாம் ஆண்டில் 3% வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இந்த பாலிசி திட்டத்தின் மூலம், பாண்ட் ஃபண்ட், செக்யூர்ட் ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்ட், மற்றும் குரோத் ஃபண்ட் என நான்கு வகையான நிதியை முதலீடு செய்யும் வாய்ப்புகள் உள்ளன. பாலிசிதாரர்கள் செலுத்தும் ப்ரீமியம் தொகையிலிருந்து அவர்களுக்கு விருப்பமான நிதியின் பங்குகள் வாங்கப்படும். 
 
இந்தத் திட்டத்தில் 90 நாட்களான குழந்தையிலிருந்து - 50 வயதானவர்கள் வரை பாலிசிதாரர்களாலாம். பாலிசியின் ஆயுட்காலம் 10லிருந்து 20 வருடங்கள் வரை. இதன் குறைந்தபட்ச ப்ரீமியம் ரூ.20,000, அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் வருடத்திற்கு ப்ரீமியமாகச் செலுத்தலாம். 
 
இதில் ஆண்டு ஒன்றுக்கு செலுத்தப்படும் ப்ரீமியத்திலிருந்து பத்து மடங்கு கவரேஜ், மொத்த ப்ரீமியத்திலிருந்து 105% வருவாய் உறுதியாகப் பெறலாம். இன்ஷூரன்ஸ் ஆயுட்கால முடிவில், பாலிசிதாரருக்கு அவர் வைத்திருக்கும் முதலீட்டின் மதிப்புக்கு நிகரான தொகை கிடைக்கும். மேலும் இதனுடன் எல்.ஐ.சியின் விபத்து மற்றும் இறப்புக்கான இன்ஷூரன்ஸையும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் உண்டு. 
 
நிதி வகையை மாற்றிக்கொள்ளலாம், ஒரு ஆண்டில் முதல் நான்கு மாற்றலுக்கு கட்டணமில்லை ஆனால் ஐந்தாவது முறை மாற்றுவதிலிருந்து அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். மற்ற யூலிப் பாலிசிகள் போலவே இதன் குறைந்தபட்ச இருப்பு காலமும் ஐந்து ஆண்டுகள். அதற்கு முன்னரே சரண்டர் செய்யப்பட்டால் அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 
 
இது குறித்து எல்.ஐ.சி தலைவர் எஸ்.கே.ராய் கூறுகையில், "யூலிப் திட்டத்தைத் தொடங்குவதற்கான அனைத்து ஒப்புதல்களும் எங்களிடம் உள்ளன. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து யூலிப் திட்டங்களுமே நல்ல லாபத்தைக் கொடுத்திருப்பதால், இந்தப் புதிய திட்டமும் சிறப்பான முடிவை தரும் என்று நம்புகிறோம்" என்று கூறினார். 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ