Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டேட் பேங்கின் 1000-வது கிளை திறப்பு

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) தனது 1000வது கிளையைத் தொடங்கியுள்ளது. சென்னை அசோக் நகரில் தொடங்கப்பட்டுள்ள இக்கிளையை அந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் பி.ஶ்ரீராம் ஆகஸ்ட் 14ம் தேதி திறந்து வைத்தார். இந்தக் கிளை, கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளோடு விசாலமான இட வசதியில் தொடங்கப்பட்டுள்ளது. 
 
எஸ்.பி.ஐ ஒவ்வொரு வருடமும் தனது லாபத்தில் 1% தொகையை நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளுக்காகச் செலவிடும். இந்த ஆண்டுக்கான நடவடிக்கைகளில் ஒன்றாக, பி.ஶ்ரீராம், நிர்வாக இயக்குனர் மற்றும் குழும நிர்வாகி, பி.எஸ். பிரகாஷ் ராவ், முதன்மை பொது மேலாளர், சென்னை மண்டலம், முன்னிலையில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள மொபைல் ரேடியோகிராபி சிஸ்டம் கருவியை, சென்னையிலுள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு நன்கொடையாக வழங்கினார். இதனைப் பெற்றுக்கொண்ட மருத்துவ மனையின் தலைமை மருத்துவர்  ஆர்.விமலா தனது நன்றி தெரிவித்தார்.

 

கடந்த 2014-15 நிதி ஆண்டில், ரூ.115.80 கோடியை சி.எஸ்.ஆர் நடவடிக்கைகளுக்குச் செலவிட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ. 35 லட்சத்தில் பள்ளிக்கூடங்களுக்கு 110 கணினிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. மேலும் 4 நடவடிக்கைகளில் ரூ.32.94 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த ஆண்டு ரூ.60 லட்சம் வரை சமூகப் பொறுப்புகள் நடவடிக்கைகளுக்கு செலவிட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ