Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபோர்ப்ஸ் டாப் 100 இன்னோவிட்டிவ் நிறுவனங்கள்

ஃபோர்ப்ஸ் இதழ் இந்த ஆண்டின் "உலகளவில் மிகச் சிறந்த ஆக்கபூர்வ நிறுவனங்கள்" பட்டியலை நேற்று வெளியிட்டது. 


இந்தப் பட்டியல் ஹிந்துஸ்தான் யுனிலிவர், டாடா கன்சல்டன்சி சர்விஸஸ் உள்ளிட்ட ஐந்து இந்திய நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் டெஸ்லா மோட்டர்ஸ் உள்ளது. மேலும் இதில் நான்காவது வருடமாக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த குளோபல் க்ளவுட் கம்ப்யூட்டிங் கம்பெனி(2ஆம் இடம்) இடம்பெற்றுள்ளது.


இப்பட்டியலில் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலிவர் 14வது இடத்தையும், ஐடி துறையில் சிறந்து விளங்கும் டிசிஎஸ் 57வது இடத்திலும், கட்டுமானங்கள் சேவை நிறுவனமான எல் அன்ட் டி 58வது இடத்திலும், மருந்து விற்பனை நிறுவனமான சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் 65வது இடத்திலும் மற்றும் பஜாஜ் ஆட்டோ 96வது இடத்திலும் உள்ளன.


ஃபோர்ப்ஸ் இதழ் இந்தப் பட்டியலுக்கான அளவுகோலாக, எத்தனை முதலீட்டாளர்கள் நிறுவனங்களின் எதிர்கால ஆக்கபூர்வ முடிவுகள், பொருட்கள், சேவைகள் மற்றும் சந்தைகள் மீதுள்ள எதிர்பார்ப்புகள் அடிப்படையில் இந்நிறுவனங்களின் நடப்பு தொழில் மதிப்பை விட அதிகமாக அதன் பங்குகளில் முதலிடுகிறார்கள் என்பதை எடுத்துக்கொண்டுள்ளது. 
இப்பட்டியலில் 41 அமெரிக்க நிறுவனங்களும், 29 ஐரோப்பிய நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close