Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேட்ரிமோனி.காம் ஐபிஓ மூலம் ரூ.350 கோடி நிதி திரட்ட திட்டம்

 

திருமணச் சேவைகளை நாடு முழுவதும் நடத்தி வரும் மேட்ரிமோனி.காம் என்ற இணையதள நிறுவனம் பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ.350 கோடி நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ளது. 


1997இல் நிறுவப்பட்ட, முன்பு கான்சிம் இன்ஃபோ என்றழைக்கப்பட்டு வந்த, இந்த மேட்ரிமோனி நிறுவனம், பாரத்மேட்ரிமோனி.காம், மேலும் எலைட்மேட்ரிமோனி, கம்யூனிட்டிமேட்ரிமோனி, மேலும் சாதி, மதம் சார்ந்த பெங்காலிமேட்ரிமோனி, கன்னடா மேட்ரிமோனி, தமிழ்மேட்ரிமோனி போன்ற பெயர்களில் திருமண சேவைகளைச் செய்து வருகின்றன. 


மேலும் தாம்பூலம் மற்றும் இதர திருமண சேவைகளான மேட்ரிமோனி போட்டோகிராபி, மேட்ரிமோனி கிஃப்ட்ஸ், மேட்ரிமோனி டைரக்டரி மற்றும் மில்லியன் வெட்டிங் பிக்ஸ் உள்ளிட்ட சேவைகளையும் பரிசாக செய்து வருகிறது. 


கடந்த வருடத்தில் சென்னையிலுள்ள நிறுவனத்திற்கு, கட்டணம் செலுத்தும் 6,47,000 சந்தாதாரர்கள் மூலம் கிடைத்த வருமானம் 232 கோடி ரூபாய். 
2006இல் யாஹூ இந்நிறுவனத்தின் 12% பங்குகளை வாங்கியது. ஆனால் 2011இல் மொத்த பங்குகளையும் விற்றுவிட்டு வெளியேறியது. 


இந்த மேட்ரிமோனி இணைய நிறுவனம் பொதுப் பங்கு வெளியீடுகள் மூலம் நிதி திரட்டுவதற்கான அனுமதி கேட்டு செபியிடம் பதிவு செய்துள்ளது. இந்த வருடத்தில் இரண்டாவதாக பதிவு செய்யும் இணையதள நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தப் பொதுப் பங்கு வெளியீடுகள் மூலம் திரட்டப்படும் நிதியை கோடக் மஹிந்திரா கேப்பிட்டல், சிட்டி குரூப் குளோபல் மார்கெட்ஸ் மற்றும் டியூட்ஷே ஈக்விட்டீஸ் இண்டியா ஆகிய நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ