Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சார்ஜாவில் சேஃப் ஜோன்... வழிக்காட்டும் FIEO!

இன்றைய நிலையில் ஏற்றுமதி தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம். ஆனால் அவர்களுக்கு அடிப்படை விஷயங்கள் தெரிந்திருந்தாலும் பொருட்கள் தேர்வு மற்றும் நாடுகள் தேர்வு செய்வதில் அதிகமான குழப்பங்கள் நிலவி வருகின்றன.

ஏற்றுமதியாளர்களின் இப்படியான பல சந்தேகங்களுக்கு தீர்வு தரும் பொருட்டு மத்திய அரசின் தொழில் வர்த்தகத் துறையின் கீழ் செயல்படும் ஏற்றுமதி அமைப்பான FIEO (Federation Of Indian Export Organisations) பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கட்டண பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

அதனடிப்படையில் சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ஒரு மாநிலமான சார்ஜாவில் அமைக்கப்பட்டிருக்கும் சேஃப் ஜோன் (SAIF ZONE -Sharja Airport International Free Zone) என்கிற அமைப்புடன் கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

அது என்ன சேஃப் ஜோன் என்பதுதானே உங்களின் அடுத்த கேள்வி. சேஃப் ஜோன் என்பது உலக நாடுகளிலுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் அல்லது ஒதுக்கப்பட்டிருக்கும் அலுவலகத்திற்கான இடமாகும். இங்கு 125, 250, 400 மற்றும் 600 சதுர மீட்டர் அளவுள்ள அலுவலகங்களை ஏற்றுமதியாளர்கள் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

அதெற்கென்று ஆண்டு வாடகையாக 16,353 டாலர், 27,255 டாலர், 38,157 டாலர் மற்றும் 54,510 டாலர் என்கிற அளவிலான தொகையை சேஃப் ஜோன் அமைப்பு வசூலிக்கிறது. இவர்கள் தரும் உரிமத்தைக் கொண்டு ஒரு ஏற்றுமதியாளர் தனது நாட்டிலிருந்தே பொருட்களை ஐக்கிய அரபு நாடுகளுக்கு இறக்குமதி செய்து அந்த நாட்டுக்குள் விநியோகம் செய்யலாம், அந்த நாட்டிலிருந்து மற்ற நாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதற்கான அனைத்து வசதிகள் மற்று சட்ட நடவடிக்கைகளை செய்து தருவதாக சொல்கிறது சேஃப் ஜோன்.

சேஃப் ஜோனின் இந்த திட்டம் குறித்த மேலும் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள அவர்களின் 

www.saif-zone.com

என்கிற வலைதளத்தை பார்க்கவும். அவர்களை மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்ள நினைத்தால் info@saif-zone.com என்கிற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம்.




 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ