Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சங்க வெள்ளி விழா : செபி சேர்மன் சின்ஹா பாராட்டு..!

சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ்நாடு முதலீட்டாளர்கள்  சங்கத்தின் (TamilNadu Investors Association) வெள்ளி விழா அண்மையில் கொண்டாடப்பட்டது .

இந்த நிகழ்வில் செபியின் சேர்மன் யு.கே. சின்ஹா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் தமிழ்நாடு முதலீட்டாளர்கள்  சங்கத்தின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார். 
 
கௌரவ விருந்தினராக  பிஎஸ்இயின் நிர்வாக இயக்குனர்  ஆஷிஷ் குமார் சௌஹான் கலந்து கொண்டார். 
 
 கே.என்.சிவசுப்ரமணியன்( முன்னாள் சிஐஓ, ப்ராங்க்ளின்  டெம்ப்ளிடன்  மியூச்சுவல் ஃபண்ட்)  மற்றும் சங்கரன் நரேன் ( சிஐஓ, புரூடென்ஷியல் ஐசிஐசிஐ ஏ எம் சி, மும்பை) ஆகியோர் முதலீடு தொடர்பாக உரையாற்றினர்.
தமிழ்நாடு முதலீட்டாளர் சங்கத்தின் தலைவர் ஷியாம் சேகர், முன்னாள் தலைவர் ஏ.கே.நாராயணன், முன்னாள் தலைமை செயலாளர் டி எஸ். கிருஷ்ணமூர்த்தி, பங்குச் சந்தை நிபுணர்கள் வி.நாகப்பன், இஎம்சி பழனியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர். 
இந்த விழாவில்  மேலும் தமிழ்நாடு முதலீட்டாளர் சங்கத்தின் உறுப்பினர்களும், முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close