Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் ரூ. 20 ஆயிரத்தைத் தொட்ட தங்கம்!

 
தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 20 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. அதாவது கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலையானது ரூ. 20 ஆயிரத்துக்குக் கீழ் இருந்தது. ஆனால் உலக நாடுகளில் நிலவும் பொருளாதாரச் சிக்கல்களால் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது. இன்று ஆபரணங்களுக்குப் பயன்படுத்தப்படும் 22 காரட் தங்கத்தின் விலையானது ரூ. 20560 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 2570 ஆக உள்ளது. இதே போல 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ. 27490 ஆக உள்ளது. 
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 36330 ஆகவும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 38.90 ஆகவும் உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ