Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச் சந்தை சிறப்புச் செய்தி எஸ்.லட்சுமணராமன், ஆர்.எம்.ஆர். ஷேர்ஸ்

 பங்குச் சந்தை சிறப்புச் செய்தி எஸ்.லட்சுமணராமன், ஆர்.எம்.ஆர். ஷேர்ஸ்


காலை 11.07 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1009.76 புள்ளிகள் சரிந்து 26,356.31 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வருகின்றன. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 314.85 புள்ளிகள் சரிந்து 7985.10 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வருகின்றன.

இந்த சரிவு சென்செக்ஸின் மூன்றாவது மிகப்பெரிய சரிவாகும். 21 ஜனவரி 2008 அன்று சென்செக்ஸ் 1,408.35 புள்ளிகள் சரிந்தது தான் மிகப் பெரிய சரிவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிஃப்டி 16 ஆகஸ்ட் 2013 அன்று 234.45 புள்ளிகள் சரிந்தது தான் முதலிடந்தில் இருந்தது.
 
ஆனால் அதை விட 80 புள்ளிகள் கூடுதலாக சரிந்து 314.85 என்கிற புதிய சரிவை பதிவு செய்திருக்கிறது.
 
இந்தியாவின் அனைத்து துறை சார்ந்த இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. இதில் அதிகபட்சமாக ஆட்டோமொபைல், வங்கி, கேப்பிட்டல் கூட்ஸ், மிட் கேப் போன்றவைகள் கடுமையான சரிவில் வர்த்தகமாகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.46 ஆக சரிந்திருக்கிறது. இந்த சரிவு மேலும் தொடர்வதற்கும் வாய்ப்பிருப்பதாக அனலிஸ்டுகள் கணித்திருக்கிறார்கள். அதோடு கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 2,649 ஆக சரிந்திருக்கிறது.

உலக அளவில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிப்பது குறித்த ஒரு தெளிவில்லாத நிலையில் இருக்கிறது. சீனாவின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் இதற்கு மேல் முன்னேற இயலாத அளவுக்கு ஒரு தேக்க நிலை நிலவுகிறது. 

சீனா ஒரு ஏற்றுமதி பொருளாதாரம். தன் ஏற்றுமதியை உயர்த்த தன் பண மதிப்பை குறைத்தது. இருப்பினும் உலக அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக சீனாவின் ஏற்றுமதி அதிகரிக்கவில்லை. அதோடு 1990 ல் தொடங்கப்பட்ட சீனாவின் பங்குச் சந்தைகள் தற்போது 9 கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை கொண்டிருக்கிறது.

இந்த 9 கோடி முதலீட்டாளர்களில் பெரும்பாலான முதலீட்டாலர்களின் முதலீடுகள் சமீபத்தில் ஏற்பட்ட சரிவுகளில் காணாமல் போனது என்பது உலகறிந்தது தான். பங்குச் சந்தை சரிவில் இழந்த பணம் வங்கியிலிருந்து கடனாக வந்த பணம் என்பதால், கடனாளி இருக்கிறார்கள். தற்போது தன் மக்களின் நுகர்வு சக்தி குறைந்திருப்பதால், நுகர்வையும் அதிகப்படுத்த முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது சீனா. 

இந்த காரணங்களால் நம் இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் அந்நிய நிகர முதலீட்டாளர்கள் பயத்தில், தங்கள் முதலீடுகளை திரும்ப எடுக்கத் தொடங்கி இருக்கின்றனர். எனவே இந்திய சந்தை சரிவை சந்தித்து வருகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ