Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிஎல் எஃப் : ரூ. 375 கோடிக்கு என்சிடி வெளியீடு

டிஎல் எஃப் நிறுவனம் 375 கோடிக்கு ரூபாய்க்கு பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை  (NCD) இன்று (ஆக. 25, 2015)  வெளியிட உள்ளது. திரட்டப்படும் நிதி மூலமாக நிறுவனத்தின் பணப் புழக்கத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த மாதத்தின் துவக்கத்தில் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலமாக  1000 கோடி ரூபாய் திரட்டி இருந்தது.


ஏப்ரல் - ஜூன் காலாண்டில் டிஎல் எஃப் நிறுவனத்தின்  மொத்த வருமானம் 2345.62 கோடி ரூபாய்.  இது கடந்த வருடம் இதே காலாண்டில் மொத்த வருமானம் 1,851.6 கோடி ரூபாயாக இருந்தது. ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் கடன் 633 கோடி ரூபாய் அதிகரித்து  ரூ. 21,600 கோடியாக உயர்ந்துள்ளது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP