Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போட்டி போட்டு இறங்கும் சீன, இந்திய சந்தைகள்

இன்றும் சீன சந்தையில் சரிவு தொடர்வதால், இந்திய சந்தையும் சரிவைச் சந்தித்து வருகிறது. நேற்றைய ஒரு நாளில் சீன சந்தையில் ஏற்பட்ட 8% வீழ்ச்சியால் இந்தியப் பங்குச் சந்தையின் வீழ்ச்சி உச்சத்தைத் தொட்டது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஏறக்குறைய 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.


ஆனால் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்தில் தொடங்கியது. முதலீட்டாளர்கள் கொஞ்சம் ஆறுதலைடைந்தார்கள். ஆனால் அதுவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இன்றும் சீனா சந்தை 6% சரிவை சந்தித்து வருகிறது. இதனால் ஏற்றத்தில் தொடங்கிய இந்தியச் சந்தை மீண்டும் சரிவை சந்தித்தது. 
இன்று காலை 10.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 140.67 புள்ளிகள் அதிகரித்து, 25,882.23 என்ற நிலையில் வர்த்தகமாகியது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 29.10 புள்ளிகள் அதிகரித்து 7,838.10 என்ற நிலையில் வர்த்தகமாகி வந்தது. 

ஆனால் அடுத்த சில மணித்துளிகளில் சென்செக்ஸ் 200, 300 புள்ளிகள் என்ற அளவில் குறைந்து இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ