Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்க நகைக் கடன் தகவலுக்கு மிஸ்டு கால் போதும்: முத்தூட் ஃபைனான்ஸ்

தங்க நகைக் கடன்களை வழங்கும் முத்தூட் ஃபைனான்ஸ் லிமிட்டெட் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேம்படுத்தும் வகையில் "மிஸ்டு கால்" சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள், தன்னுடைய தங்க நகைக் கடன் குறித்த விவரங்களை அறிய, தாங்கள் பதிவு செய்திருக்கும் தொலைபேசி எண்ணிலிருந்து, 08040751515 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். மிஸ்டு கால் கொடுத்ததும் கூடிய விரைவில் உங்களுடைய எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அதில் வாடிக்கையாளரின் தங்க நகைக் கடன் தகவலுக்கு மிஸ்டு கால் போதும்: முத்தூட் ஃபைனான்ஸ்  எவ்வளவு, மீதம் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு, செலுத்த வேண்டிய தவணை தொகை மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். மேலும் தவணை செலுத்திய விவரமும், உடனடியாக குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இதன் மூலம் அந்த நிறுவன கிளைகளுக்குப் போகாமலேயே வாடிக்கையாளர்கள் தங்களுக்கான விவரங்களை விரல் நுனியில் பெற்றுக்கொள்ள முடியும். 

இது குறித்து முத்தூட் ஃபைனான்சின் முதன்மை பொது மேலாளர் கே.ஆர். பிஜிமோன் கூறியதாவது, "முத்தூட் ஃபைனான்சில் 65 லட்சம் கோல்டு லோன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தப் புதிய தொழில்நுட்ப சேவை மூலம் பயன்பெறுவார்கள்.” என்றார்
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ