Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஊபரில் பயணிப்பவர்களுக்கு ஒய்ஃபை ஃப்ரீ

பிரபல டாக்ஸி நிறுவனமான ஊபர், ஏர்டெல்லுடன் இணைந்து தன்னுடைய ஒவ்வொரு வாகனத்திலும் ஒய்ஃபை பயன்பாட்டை அறிமுகப்படுத்தி தனது வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவையை இலவசமாக தர உள்ளது. 


ஊபர் டாக்ஸி சேவை நிறுவனம் இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு படியாக, ஏர்டெல்லுடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக இணைய சேவையை வழங்க முன்வந்துள்ளது. இது புதிய தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 4ஜி மைஃபை (மொபைல் ஒய்ஃபை) வகை சேவையாகும்.


ஊபரில் பயணிப்பவர்கள் ஒய்ஃபை இணைப்பின் மூலம் இலவசமாக இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதன் மூலமே பயணிகள் தங்கள் டாக்ஸி கட்டணத்தையும் செலுத்திக்கொள்ள முடியும்.
இப்போது மும்பையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த சேவை, விரைவில் ஊபர் சேவை இருக்கும் 18 நகரங்களிலும் செயல்பாட்டு வர இருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ