Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஆப், ஒன்லி' திட்டத்தை நிறுத்தியது ஃப்ளிப்கார்ட்

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட், 'ஆப் மூலம் மட்டுமே வர்த்தக சேவை' என்ற திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ஃப்ளிப்கார்ட், புத்தகத்தில் ஆரம்பித்த இதன் வர்த்தகம், இன்று விற்காத பொருளே இல்லை. ஆன்லைன் வர்த்தகத்தில் மிக வேகமாக வளர்ந்து முன்னணியில் உள்ளது ஃப்ளிப்கார்ட். இதன் 70-75% வர்த்தகம் ஃப்ளிப்கார்ட் ஆப் மூலமே நிகழ்வதால் சில மாதங்களுக்கு முன் முழுமையாக ஆப் மூலம் மட்டுமே வர்த்தக சேவையை அளிக்கலாம் என்ற முடிவுக்கு  ஃப்ளிப்கார்ட் வந்தது.
                                அதற்கு முன்பே மிந்த்ரா டாட் காம், 'ஆப் ஒன்லி' சேவைக்கு மாறிவிட்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம். இந்த 'ஆப் ஒன்லி' சேவை எளிதாக இருந்தாலும், இதிலும் பல சிக்கல்கள் இருப்பதாக எதிர்ப்புகள் எழுந்துள்ளன. 
வாடிக்கையாளர்களுக்கு கணினியில் கிடைக்கும் விலை ஒப்பீடு செய்யும் வசதி, மற்றும் பரந்த ஸ்கீரீன் வியூ போன்றவை மொபைல் ஆப்பில் கிடைப்பதில்லை.
 
அதோடு விலை உயர்ந்த பொருட்களை ஆப் மூலம் பெரும்பாலும் யாரும் வாங்குவதில்லை. இதனால், ஃபர்னிச்சர்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மின் பொருட்கள் டீலர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். 
இந்தக் காரணங்களால் ஃப்லிப்கார்ட் தனது 'ஆப் ஒன்லி' திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ