Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பலன் தரும் புத்தக நிலையம்!

 


சென்னை சைதாப்பேட்டை, புஜங்கராவ் தெருவில் ஒரு வீட்டுக்குள் உள்ளது ஆர்.ஈ.சி. புத்தக வங்கி. சரி, இதில் என்ன சிறப்பு? இருக்கிறது! ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் பெறுமானம் உள்ள இன்ஜினீயரிங், கலை, அறிவியல் புத்தகங்களை வெறும் நூறு ரூபாய்க்கு ஆறு மாதங்கள்(ஒரு செமஸ்டர்) படிக்கத் தருகிறார்கள். இதில் உறுப்பினராக வெறும் ரூ.2700 கட்டினால் போதும். 


காப்புத்தொகை 900 ரூபாயை விலகும்போது பெற்றுக்கொள்ளலாம். அது தவிர்த்து ஒரு செமஸ்டருக்கு 600 ரூபாய் புத்தக வாடகை கட்டணம். 6க்கு மேல் வேண்டும் என்றால் கூடுதலாக ஒரு புத்தகத்திற்கு ஐம்பது ரூபாய் செலுத்தினால் போதும். 3000 உறுப்பினர்கள், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களைக் கொண்டுள்ள இந்த வங்கியின் வருடாந்திர லாபம் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய். ஒவ்வொரு வருடமும் 12 லட்சத்திற்கு புது புத்தகங்கள் வாங்குகின்றனர். கல்லூரிகளுக்கு சென்றே விளம்பரம் செய்தாலும் சிறப்பான சேவையால் உறுப்பினர்கள் மூலமே புதிய மாணவர்கள் வருகிறார்கள் என்று பயனடையும் மாணவர் ஒருவர் கூறுகிறார்.

 


இதை வர்த்தகமாக மட்டும் அல்லாது செமஸ்டருக்கு 100 ஏழை மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கி சேவையாகவும் செய்து வருகிறார் இதன் நிறுவனர் திரு.கணேசன். மேலும் மருத்துவ படிப்பிற்கான புத்தகங்களையும் வழங்க திட்டம் உள்ளது என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். பல்லாவரம் மற்றும் ஆலந்தூரில் இவர்களுக்கு கிளைகள் இருந்தாலும் நிர்வாகிக்க ஆள் இல்லாததால் ஆலந்தூர் கிளை மூடப்பட்டது என்பது வருத்ததிற்குரிய விஷயமே! 

 

 

-தா.நந்திதா, 

படங்கள்: எஸ்.பிரசாந்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ