Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐஓசி ஆஃபர் ஃபார் சேல் : 86% பங்குகளை வாங்கியது எல்ஐசி

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, ஐஓசி ஆஃபர் ஃபார் சேல் ல் 86% பங்குகளை வாங்கியது

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பங்கு விலக்கல் நடவடிக்கையை மேற்கொண்டது. ஆஃபர் ஃபார் சேல் அடிப்படையில், ஐஓசியின் ஒரு பங்கின் விலை ரூ. 387 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.  மொத்தம் 24.28 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 9.379 கோடி. இந்த 10 சதவிகித பங்குகளில் 86% பங்குகளை எல்ஐசி வாங்கியுள்ளது. இதன் மூலம் ஐஓசி நிறுவனத்தில் முன்பு 2.52 சதவிகிதமாக இருந்த எல்ஐசியின் பங்கு மூலதனம் 11.11 % ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த திங்கள் கிழமை ஐஓசி பங்கு ஒன்றின்  விலை ரூ. 378.25 என்ற நிலையில் வர்த்தகமாகிய போதும்,  ஐஓசி ஆஃபர் ஃபார் சேல் : மூலம் ரூ.387க்கு விற்பனை செய்துள்ளது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close