Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேதாந்தாவின் லஞ்சிகார் ஆலை மூடல்

உருக்கு மற்றும் சுரங்கத் தொழில் நிறுவனமான வேதாந்தா, லஞ்சிகாரில் உள்ள தனது அலுமினிய உற்பத்தி ஆலையை மூட முடிவு செய்துள்ளது.


வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான லஞ்சிகாரில் உள்ள ஆலையில் பாக்சைட்டிலிருந்து 5 மில்லியன் டன் அலுமினியம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பாக்சைட் பற்றாக்குறையால் அலுமினிய உற்பத்தி விலை அதிகரித்து வருவதாலும், ஆனால் அதன் விற்பனை விலை குறைந்து வருவதாலும் வேதாந்தா இந்த முடிவுக்கு வந்துள்ளது. 


ஏற்கனவே சட்டீஸ்கர் கொர்பாவில் இருந்த அலுமினிய உற்பத்தி ஆலையை முடியது குறிப்பிடத்தக்கது.


பங்குச் சந்தையில் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் 28.8.15ம் தேதி காலை 11 மணி நிலவரப்படி 6.36% அதிகரித்து 96.95 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP