Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

4ஜி சேலஞ்ச்: வெல்லப் போவது யார்?

து ஸ்மார்ட் போன் மற்றும் இணைய யுகம். இந்த யுகத்தில் புதிதாக நுழைந்திருக்கிறது 4ஜி தொழில்நுட்பம்.

இந்த 4ஜி களத்தில் இந்தியாவில் முதலில் இறங்கியது ஏர்டெல், ரிலையன்ஸ் நிறுவனமும் வரும் டிசம்பரில் 4ஜி அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்நிலையில் ஏர்டெல், ரிலையன்சுக்கு சவாலாக வோடஃபோன் தயாராகிறது. இந்த 4ஜி போட்டியில் ஜெயிக்கப் போவது யார்?  


இந்த ஆண்டு உறுதியில் இந்தியாவில் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில் முக்கிய சந்தையான மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சர்வதேச அளவில் வோடஃபோன் 4ஜி சேவை 18 நாடுகளில் செயல்படுத்தப்படுகிறது. மொத்தம் 2 கோடி 4ஜி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.


பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி 4ஜி சேவையை 290 நகரங்களில் அறிமுகப்படுத்தியது. அதிவேக 4ஜி சேவையை இந்தியாவில் முதல் முறையாக ஏர்டெல் தான் வழங்குகிறது என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஒ கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.


இந்த 4ஜி போட்டியில் ஏர்டெல் லைஃப் டைம் மொபைல் கட்டணம் இலவசம் என்ற சேலஞ்ச் செய்துள்ளது. அந்த சேலஞ்சை நிகழ்த்திக் காட்டுமா வோடஃபோன்? பார்க்கலாம்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ