Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை... க்ளெய்ம் மறுக்கப்பட என்ன காரணம்?

 குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை...

க்ளெய்ம் மறுக்கப்பட என்ன காரணம்?
குறைப் பிரசவத்தில் பிறந்த எனது குழந்தைக்கு மூன்று வாரம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன். பேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுத்திருந்த நிலையிலும் க்ளெய்ம் மறுக்கப்பட்டது ஏன்?
கே.செல்வி, திருப்பூர்,
சி.பாலாஜி பாபு, சென்னை மண்டலத் தலைவர், ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
‘‘இரு காரணங்களால் உங்களுக்கு க்ளெய்ம் மறுக்கப்பட்டிருக்கலாம். 1. நீங்கள் எடுத்திருந்த பாலிசியில் குழந்தையின் பெயர் இல்லாமல் இருந்திருக்கலாம். 2. உங்களின் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைக்கு பாலிசியில் க்ளெய்ம் இல்லாமல் இருந்திருக்கலாம். எந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியாக இருந்தாலும், குழந்தைகளைப் பொறுத்தவரை, சைல்டு டே ஒன் என்கிற கவரை எடுத்திருந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கான சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்கும்.’’
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ