Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமானம் குறையும் போது ஃபண்டுகளை மாற்ற வேண்டுமா?

 நான் கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து ஒரு வருட காலத்துக்கு எஸ்ஐபி முறையில் மாதம் ரூ.10,000 வீதம் ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட்  மற்றும் ஐசிஐசிஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்டிலும் முதலீடு செய்து வருகிறேன். 30.6.15 கணக்கின்படி, ரிலையன்ஸ் ஃபண்டில் ரூ.78,864  ரூபாயும் ஐசிஐசிஐ ஃபண்டில் 81,698 ரூபாயும் இருக்கிறது. தற்போது எஃப்டியில் கிடைக்கும் வருமானத்தைவிட குறைவாகவே இந்த ஃபண்டுகளில் கிடைக்கிறது. தொடர்ந்து இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாமா? வேறு நல்ல ஃபண்டுகள் இருந்தால் பரிந்துரைக்கவும்.

எஸ்.சந்தானகிருஷ்ணன், சென்னை
த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர், வைஸ் வெல்த் அட்வைசர்ஸ்
‘‘முதலில், எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது குறுகிய காலத்துக்கு ஆனதல்ல. குறைந்தபட்சம் 10 வருடங்களை கருத்தில்கொண்டு முதலீடு செய்ய வேண்டும். நீண்ட காலத்தில் முதலீடு செய்வதன் வழியாகத்தான் ஈக்விட்டி ஃபண்டின் செயல்திறனை நம்மால் உணர முடியும். நீங்கள் நல்ல ஃபண்டைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள்.
 
இப்போது முதலீடு செய்துவரும் ஃபண்டுகள் ஐந்திலிருந்து பத்து ஆண்டுகளில் நல்ல வருமானத்தை கொடுக்கக் கூடியவை. எஸ்ஐபியை பத்து வருடங்களுக்கு புதுப்பித்துக் கொண்டு தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். வேறு ஃபண்டுக்கு மாற வேண்டாம்.’’
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP