Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகள் திட்டம்: தமிழகம் புறக்கணிப்பு

மத்திய அரசு நகர்ப்புறத்தில் உள்ள ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதற்காக 9 மாநிலங்களில் 305 நகரங்களைத் தேர்வு செய்துள்ளது. அந்தப் பட்டியலில் தமிழகத்திலிருந்து ஒரு நகரம் கூட தேர்வு செய்யப்படவில்லை.


மத்திய அரசின் நில ஆக்கிரமிப்பு மசோதா நிறைவேறுவதற்கு பலவிதமான தடைகள் இருக்கின்ற நிலையிலும், நகர்ப்புறத்தில் உள்ள ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் துணிந்து அறிவித்துள்ளது. 


நகர்ப்புறமயமாக்கலை மிகத் தீவிரமாக முன்னெடுத்துள்ள அரசு, நகர்ப்புற ஏழைகளுக்கான வீடுகளை அமைக்க ஒரு வீட்டிற்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2.30 லட்சம் வரை வீதம் ஒதுக்க திட்டமிட்டுள்ளது. 


இதற்கு தேர்வு செய்யப்பட்ட மாநிலங்கள், சட்டீஸ்கர் (36), குஜராத் (30), ஜம்மு காஷ்மீர் (19), ஜார்கண்ட் (15), கேரளா (15), மத்திய பிரதேசம் (74), ஒடிசா (42), ராஜஸ்தான் (40) மற்றும் தெலங்கானா (34).

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ