Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்கள் நிதியளவில் தங்களை மேம்படுத்திக் கொள்ள...!

ரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதில் திறமையானவர்கள் ஆண்களா? பெண்களா?. நிச்சயம் பெண்கள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. 

 

அதிலும், வேலைக்குப் போகும் பெண்கள், வீடு, அலுவலகம் என இரண்டு இடங்களிலும் பம்பரம்போல் சுழன்று அனைத்தையும் சமாளிப்பவர்களாக இருக்கிறார்கள். 

 

ஆனால் இவர்களின் உழைப்பெல்லாம் பெரும்பாலும் வீணாகிறது. காரணம் தங்கள் நிதியை எப்படி மேலாண்மை செய்ய வேண்டும் என்பது தெரியாமல் இருப்பதுதான். 

 

எனவே பெண்கள் தங்களைத் தாங்களே நிதியளவில் மேம்படுத்திக்கொள்வது அவசியமாகிறது. அது அவர்களுக்கு மேலும் கூடுதல் வலிமையைக் கொடுக்கும். 
 
எப்படி பெண்கள் தங்களைத் தாங்களே நிதியளவில் மேம்படுத்திக்கொள்வது என்பதை விளக்குகிறார்,
 
ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷேந்து பிந்தால்
 

 

இன்று, வீட்டிலிருந்து கோட்டை வரை பெண்கள் சிறந்து விளங்கினாலும், ஒட்டு மொத்தமாக பெண்களை மேம்படுத்துவதில் இப்போதும் பெரிய இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதிலும், பெண்களின் நிதி மேம்பாட்டை வளர்ப்பதிலும் பெரிய சவால்களைப் பார்க்கிறேன்.   

 

பெண்கள் முடிவெடுக்க தயாராக வேண்டும்:

 

பெரும்பாலான வீடுகளில், பெண்கள் தங்கள் சம்பாத்யத்தை என்ன செய்ய வேண்டும், எதில் முதலீடு செய்ய வேண்டும் போன்ற முடிவுகளை, அவர்களது தந்தையோ கணவரோ தான் எடுக்கிறார்கள். பெண்கள் சொல்கிற இடத்தில் கையெழுத்து மட்டுமே போடும் நிலையில் இருக்கின்றனர். 

 

இதில் நம்பிக்கை என்னும் அம்சம் இருக்கிறது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால், கார் வாங்குவது அல்லது வீடு வாங்குவது அல்லது விடுமுறை சுற்றுலா செல்வது என மற்ற எந்த முடிவுகளையும் கூட பெண்கள் ஏன் முடிவுகளை எடுப்பதில்லை என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. மற்ற விஷயங்கள் ஓரளவேனும் விவாதிக்கப்பட்டாலும், தனிப்பட்ட நிதி மற்றும் முதலீட்டு முடிவுகளில் பெரும்பாலான பெண்கள் பின்தங்கியே உள்ளனர்.

 

இதனை மாற்ற முடியுமா? 

 

நிச்சயமாக முடியும். அதற்கு முதலீடு மற்றும் நிதித் திட்டமிடல் பற்றிய சில அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொண்டால் போதும். 

 

காசோலைகள்/ பணத்தை டெப்பாசிட் செய்ய, மற்றும் உங்கள் பாஸ் புக்கை அப்டேட் செய்ய வங்கிக்குச் செல்வது போன்ற சாதாரண வேலைகளிலிருந்து துவங்கி, பிறகு பல்வேறு பயன்பாட்டு கட்டணங்கள் அல்லது பயண முன்பதிவுகளுக்கு ஆன்லைனில் பணம் செலுத்த துவங்கலாம்; அதே சமயம், நீங்கள் செய்யும் செலவுகளையும் கவனியுங்கள். படிப்படியாக, காப்பீட்டின் அம்சங்களையும் அவசியத்தையும் கற்றுக்கொள்ளுங்கள், 

 

உங்கள் குடும்பத்திற்கு ஆயுள் காப்பீடும் ஆரோக்கிய காப்பீடும் பெற்றிருக்கிறீர்களா, உங்களின் சொத்துகள் இயற்கை சீரழிவுகளிலிருந்தும் மற்ற நெருக்கடிகளிலிருந்தும் காப்பீடு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்யுங்கள்.

 

நிதி ஆலோசனைகள் கைக்கொடுக்கும்

 

இதையெல்லாம் ஏன் செய்கிறோம்? செய்தால் என்ன பலன் கிடைக்கும்? அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் நிதி ஆலோகர்களிடமிருந்து கிடைக்கும். ஒரு நிதி ஆலோசகரிடம் அறிமுகமாகி, உங்களுக்கான முதலீட்டு முடிவுகளை எடுக்கும் திட்டங்கள்/ யோசனைகள் குறித்து கேட்டறிந்துகொள்ளுங்கள். 

 

என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும்:

 

பணவீக்கம் என்றால் என்ன? பணவீக்கம் எப்படி உங்களின் முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்?, 

 

பரஸ்பர நிதிகள் போன்ற புதிய வகை நிதித் திட்டங்களை எப்படி உங்களின் வாழ்நாள் குறிக்கோள்களை நிறைவேற்றும் என்றும் பணவீக்கத்தை சரிசெய்யும் வருவாயை அளிக்கின்றன என்றும் கேட்டு தெளிவாகப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களின் முதலீட்டு விவரங்களையும் உங்கள் இலக்குகளையும் தொடர்ந்து கண்காணியுங்கள். 

 

தாமதம் வேண்டாம்:

 

முதலீட்டில் வயது மிகவும் முக்கியம். வயதுக்கேற்ப முதலீடுகள் மாறும் என்பதால் நீங்கள் எவ்வளவு விரைவில் முதலீடு செய்ய துவங்குகிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் இலக்குகளை அடைய எளிதாக இருக்கும். நீண்ட கால அடிப்படையில் முதலீடு இருப்பது நல்லது. குறிப்பாக ஓய்வுக்காலத்திற்கு அதிக தொகையை சேர்த்திடுங்கள்.


சரி முதலீடுக்குப் பின் என்ன?

 

இறுதியாக; நீங்கள் செய்துள்ள முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ப்ராடக்ட்கள், நிகழ்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் போன்றவற்றைத் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள். முதலீட்டாளர் விழிப்புணர்வு முகாம்கள் அல்லது கூட்டங்களில் முடிந்தவரை பங்கேற்பதும் உங்களுக்கு உதவும்.

 

உங்களுடைய நிதி மேம்பாட்டுப் பயணத்தைத் தொடர தேவையெல்லாம், சிறு முயற்சி மட்டுமே. உங்களின் சொந்த எதிர்காலத்தை நிதியளவில் நீங்களே முடிவு செய்பவர்களாக மாறும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால், நிச்சயம் உங்களுக்கு அது சாத்தியம்தான். 

 

என்ன பெண்களே தயார்தானே? ஆம் என்றால் நீங்கள், உங்கள் நட்பு வட்டத்தையும் நிதி மேம்பாட்டை நோக்கி அழைத்துச் செல்லலாமே!

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ