Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி தடையில்லா மின்சாரம்... வந்தாச்சு ஸ்மார்ட் சிட்டி!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பட்டியலை ஆகஸ்ட் 27ம் தேதி அரசு வெளியிட்டது. இனி தடையில்லா மின்சாரம், தண்ணீர் என எல்லாம் கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்படும்.
 

ஸ்மார்ட் சிட்டி.....!
 

மக்களின் வளமான வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளையும், ஆரோக்கியமான சுற்றுச் சூழலையும் காலத்திற்கேற்ற ஸ்மார்ட்டான தீர்வுகளின் மூலம் கொண்ட ஒரு நகரமே ஸ்மார்ட் நகரம் ஆகும்.


மொத்தம் 98 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் அதிக ஸ்மார்ட் நகரங்களை கொண்டிருக்கும் மாநிலங்களில் இரண்டு இடங்களில் உத்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உள்ளன.
 

தமிழ்நாட்டில் தேர்வாகியுள்ள 12 நகரங்கள்:
1. திருச்சி, 2. திருநெல்வேலி, 3. திண்டுக்கல், 4. தஞ்சாவூர், 5. திருப்பூர், 6. சேலம், 7. வேலூர், 8. கோயமுத்தூர், 9. மதுரை, 10. ஈரோடு, 11. தூத்துக்குடி, 12. சென்னை
 

எதனடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி தேர்வு செய்யப்படுகிறது?


ஆன்லைன் நிர்வாகம்; ஆன்லைன் குறைத்தீர்ப்பு அமைப்புகள்; ஆன்லைன் செய்திச்சேவை; ஆன்லைனில் அரசு செலவீனங்களின் பதிவு; ஸ்வச்ச பாரத்; 5% கழிப்பறை வசதி உயர்வு; சம்பளம் வாங்குவோரின் எண்ணிக்கை; நகர சீரமைப்பு மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு போன்ற காரணிகளை அடிப்படையாக வைத்து ஸ்மார்ட் சிட்டி தேர்வு செய்யப்படுகிறது.
 

ஸ்மார்ட் சிட்டியில் எதெல்லாம் ஸ்மார்ட்?


மையப்படுத்தப்பட்ட பொதுத் தகவல் அமைப்பு, கழிவை ஆற்றலாக மாற்றுதல், எரிபொருள் மற்றும் உரம், முழுமையான அசுத்த நீர் சுத்தகரிப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள், ஸ்மார்ட்டான வாகன நிறுத்த வசதி.
 

ஸ்மார்ட் சிட்டியில் என்னென்ன வசதிகள்?


தடையில்லா தண்ணிர் மற்றும் மின் விநியோகம், முறையான கழிவு நீக்கம், திடக்கழிவு மேலாண்மை, சிறப்பான பொது போக்குவரத்து வசதி, தொழில்நுட்ப தொடர்பு வசதி, ஆன்லைன் நிர்வாகம், திறமிக்க குடிமக்கள் பாதுகாப்பு.
 

தேர்வு செய்யப்பட்ட நகரங்கள்:


ஸ்மார்ட் சிட்டி அமைக்க 98 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 24 மாநில தலைநகர்களும் அடங்கியுள்ளன. இவற்றில் 13 நகரங்கள் உத்திரப்பிரதேசத்திலும், 12 நகரங்கள் தமிழ்நாட்டிலும், 10 நகரங்கள் மஹாராஷ்டிராவிலுமாக திட்டமிடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, அரசு 24 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

- ஜெ. சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ