Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹெச்டிஎஃப்சி வட்டி குறைப்பு: வங்கி பங்குகள் விலை இறக்கம்..!

ந்தியப் பங்குச் சந்தையில் இன்று (01.09.2015) காலை வங்கி பங்குகளின் நிஃப்டி குறியீடு 1.58% குறைந்து 16,876.10 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 

இதில் முக்கியமாக பிஎன்பி பங்கு விலை 2.90% குறைந்து ரூ. 140.65க்கும், யெஸ் பேங்க் பங்கு விலை 2.66% குறைந்து ரூ. 671.10க்கும், ஹெச்டிஎஃப்சி பேங்க் 1.93% குறைந்து ரூ. 1,007.60க்கும் வர்த்தகமாகி வருகிறது. 
 
மேலும் இண்டஸ்இண்ட் பேங்க், ஆக்சிஸ் பேங்க், எஸ்பிஐ பேங்க், கோடக் பேங்க் ஆகியவற்றின் பங்கு விலையும் 1.5-1.9% வரையிலான சரிவைச் சந்தித்துள்ளன. 
 
பிற வங்கிகளின் பங்குகளும் விலை குறைந்து வர்த்தகமாகின்றன. 
இதற்கு முக்கிய காரணம் ஹெச்டிஎஃப்சி பேங்க் தனது வட்டி விகிதத்தைக் குறைத்ததுதான் என்று சொல்லப்படுகிறது. ஹெச்டிஎஃப்சி தனது வட்டி விகிதத்தை 0.35% சதவீதம் குறைத்துள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் 9.35% வட்டி விகிதம் அமல்படுத்தப்படும். 

இதனால் ஹெச்டிஎஃப்சியை விட அதிக வட்டி விகிதம் கொண்டுள்ள பிற வங்கிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதுவே வங்கிகளின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகக் காரணம்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP