Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொருளாதார நெருக்கடி வராமலிருக்க, ரிசர்வ் வங்கி உஷார் நடவடிக்கை

2008இல் உலகப் பொருளாதார நெருக்கடி வந்த போது 'லேமென் பிரதர்ஸ்' என்ற பெயர் அடிபட்டது. அப்போது முழ்கிப்போன ஒரு அமெரிக்க முதலீட்டு நிறுவனம்தான் லேமென் பிரதர்ஸ். அந்த நிறுவனம் போல இந்திய நிதி நிறுவனங்களால் இந்தியப் பொருளாதாரத்திற்கு நெருக்கடி ஏற்படாமலிருக்க வேண்டி ரிசர்வ் வங்கி D-SIB (Domestic Systemically Important Banks) என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிநிலையின் போக்கை நிர்ணயிப்பவையாக இருக்கும்பட்சத்தில், அவை பொருளாதாரத்தைப் பாதிக்காமல் இருக்க அந்த நிறுவனங்கள் D-SIB பட்டியலில் இணைக்கப்படும். அந்த D-SIB பட்டியலில் டாப் இடங்களில் ஐசிஐசிஐ, எஸ்பிஐ வங்கிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த இரண்டு நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளன. இந்த வங்கிகள் அதிகளவில் கடன்களை வழங்கியிருப்பதாலும், பங்குச் சந்தையில் இதன் பங்குகள் அதிகரித்து வர்த்தகமாவதாலும் முக்கிய வங்கிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த D-SIB பட்டியலில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நெருக்கடி நிலைகளை எதிர்கொள்ள ஒரு குறிப்பிட்ட தொகையை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மும்பை பங்குச் சந்தையில் இன்று (01.09.2015) எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் 3.09% குறைந்து வர்த்தகமாகியுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ