Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாளை (செப் 2) வங்கிகள் இயங்காது: மத்திய அரசை எதிர்த்து வேலை நிறுத்தம்

அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இவர்கள் மத்திய அரசின் ஊழியர்கள் கொள்கைகளுக்கு எதிராக இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். 

மத்திய அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கொள்கைகளில் முரணாக இருப்பதாகக் கூறி அந்தக் கொள்கைகளை எதிர்த்து, தொழிற் சங்க கூட்டமைப்பு நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை செப்டம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் அறிவித்தது. 

இந்நிலையில் தொழிற் சங்க கூட்டமைப்புகளுடம் வங்கி மற்றும் இன்ஷுரன்ஸ் நிறுவனங்களும் கைக்கோர்த்துக்கொண்டுள்ளன. இதன்படி நாளை (செப் 2) வங்கி மற்றும் இன்ஷுரன்ஸ் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க உள்ளதால் நாளை (செப் 2) வங்கிகள் இயங்காது.

மாதத் தொடக்கம் என்பதால், ஊதியம் வழங்குவது போன்ற பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close