Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்ஃபோசிஸில் 1000 எஞ்சினியர்களுக்கு வேலை

ந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் இந்த 2015-16 நிதி ஆண்டில் 1000 எஞ்சினியர்ர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது.


தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் இன்ஃபோசிஸ், 2020ல் தனது வருமான இலக்காக 1.32 லட்சம் கோடி ரூபாயை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைய பல புதிய ப்ராஜக்ட்டுகளை திட்டமிட்டு உள்ளதாக அதன் சிஇஓ விஷால் சிக்கா தெரிவித்துள்ளார்.


இந்தப் புதிய ப்ராஜக்ட்டுகளுக்காக மொத்தம் 1000 எஞ்சினியர்களை வேலைக்கு எடுக்க உள்ளது. இவர்களில் 500-600 பேர் ஃபினாகிள் குழுவிலும், 300-350 பேர் அதன் எட்ஜ் சர்விசஸ் குழுவிலும் சேர்க்கப்பட உள்ளனர்.


2015-16 நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ. 12,738 கோடி. பங்குச் சந்தையில் இன்றைய (01.09.15) சந்தை இறுதி நிலவரப்படி அதன் பங்குகள் 5.55% குறைந்து 1089 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ