Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பங்குச் சந்தையைப் பதம் பார்த்த 'ஜிடிபி' : சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு

இந்தியப் பங்குச் சந்தை இன்று (01.09.15) தொடக்கத்திலிருந்தே சரிவை சந்தித்தது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 1600 புள்ளிகள் சரிவடைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் 600-700 புள்ளிகள் அளவில் சரிவைச் சந்தித்துள்ளன.

சந்தை முடிவில் சென்செக்ஸ் குறியீடு 586.65 புள்ளிகள் (2.23%) சரிந்து 25,696.44 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 185.45 புள்ளிகள் சரிந்து 7,785 புள்ளிகளையும் எட்டியது.


இந்தியப் பங்குச் சந்தை இன்று சரிவைச் சந்தித்ததற்கான முக்கிய காரணம், நேற்று மத்திய அரசு வெளியிட்ட 2015 நிதி ஆண்டின் ஜூன் காலாண்டின் ஜிடிபி (மொத்த உற்பத்தி வளர்ச்சி) புள்ளி நிலவரம் தான். 


ஒரு நாட்டின் வளர்ச்சி, ஜிடிபியை வைத்தே அளவிடப்படுகிறது. இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் ஜிடிபி புள்ளி விவரங்களையும் தங்கள் முதலீட்டுக்கு ஒரு காரணியாக வைத்துள்ளனர் என்பது மறுக்க முடியாதது.


இந்நிலையில் 2015 நிதியாண்டின் ஜூன் காலாண்டுக்கான ஜிடிபி, எதிர்பார்க்கப்பட்டதை விட குறைந்து அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 7.5% வரும் என்ற எதிர்பார்க்கப்பட்ட ஜிடிபி 7% மட்டுமே என்று தெரிந்ததும், சந்தையிலிருந்து முதலீட்டாளர்கள் வெளியேற தொடங்கினர். இதுவே இன்று பங்குச் சந்தையைப் பதம் பார்த்ததற்கான காரணம்.

 

கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.7%. இந்த வகையில் வளர்ச்சி அதிகரித்திருந்தாலும் எதிர்பார்க்கப்பட்ட 7.5% எட்ட முடியாமல் போனது.


திங்கட்கிழமை வர்த்தக முடிவில் 109 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்த சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை 586.65 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.


இன்று (01.09.15) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.12 பைசா சரிந்து 66.36 ரூபாயாக உயர்ந்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close