Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

D-SIB பட்டியலில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ சேர்க்கப்பட்டது, சரியா?

இந்தியப் பொருளதாரத்திற்கு நெருக்கடி ஏற்படாமலிருக்க சில முக்கிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் D-SIB (Domestic Systemically Important Banks) என்ற பட்டியலில் இணைக்கப்படும். இந்தப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.


இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வங்கிகளும் நிறுவனங்களும் நெருக்கடி நிலைகளிலிருந்து தற்காத்துக்கொள்ள, தங்கள் வியாபார அளவைப் பொருத்து, ஒரு குறிப்பிட்ட தொகையை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த D-SIB பட்டியலில் 12-14 வங்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் முதல் இரண்டு இடங்களில் ஐசிஐசிஐ, எஸ்பிஐ வங்கிகள் இடம்பெற்றுள்ளன. 


இந்த இரண்டு வங்கிகளுமே தங்கள் இருப்பில் தேவையான அளவை விட அதிக சதவீத இருப்பை வைத்துள்ள நிலையில் ஏன் ரிசர்வ் வங்கி இவற்றை D-SIB பட்டியலில் சேர்த்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. 


எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாசார்யா வெளியிட்ட அறிக்கையில், "தற்போது எஸ்பிஐ டயர் 1ல் அவசியமான இருப்பு தொகை அளவான 7%ஐ விட அதிகமாக 9.62% இருப்பு தொகை உள்ளது." என்று கூறியுள்ளார். 


ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ, சந்தா கோச்சர், "ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள தேவையான இருப்பு தொகையைக் காட்டிலும் அதிகமாகவே எங்கள் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதால், அடுத்த சில வருடங்களுக்கு எந்தப் புதிய பங்கு மூலதனங்களும் தேவைப்படாது," என்று கூறியுள்ளார்.


ஆனால் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாகவே எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் வருமுன்னே காத்துக்கொள்வது என்ற கொள்கையில் ரிசர்வ் வங்கி செயல்படுவதாகத் தெரிகிறது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ