Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறைவுக்கு 7 முக்கிய காரணங்கள்!

 
இந்தியாவின் முதல் காலாண்டுக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி)வளர்ச்சி விகிதம் வெளியாகி உள்ளது. இது எதிர்பார்த்தைவிடக் குறைவாக உள்ளது. அதாவது ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவின் டிஜிபி வளர்ச்சி 7 சதவிகிதமாக உள்ளது. இது கடந்த காலாண்டை விட 0.5 சதவிகிதம் குறைவாகும்.  ஜிடிபி வளர்ச்சி 8.8 சதவிகிதம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஜூன் காலாண்டில் ஏன் ஜிடிபி குறைந்தது என்பதற்கான காரணங்களை கிரேட் லேக்ஸ் மேலாண்மை கல்லூரியின் இணை பேராசிரியர் சி.ஆர்.ராஜன் விளக்குகிறார்.

 

சி.ஆர்.ராஜன்

1. பருவமழை!

 

இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது பருவ மழை. மழை அளவு குறையும் போது வளர்ச்சி விகிதமும் குறையும்.  ஜூன் காலாண்டில் சராசரியை விட 22 சதவிகிதம் பருவ மழை குறைந்துள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளின் சராசரியை விட குறைவு. 

 

2. நுகர்வு குறைவு!

 

பருவ மழை குறைந்தால் கிராமப்புற மக்களின் நுகர்வு வெகுவாகக் குறைந்துள்ளது. அதாவது  எதிர்பார்த்த அளவு பருவ மழை இல்லாதால்  விவசாயமும் எதிர்பார்த்த அளவு  இல்லை. அதனால் வருமானமும் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக கிராமப்புற மக்கள் செலவு செய்வது அதிக அளவில் குறைந்துள்ளது.

 

3. உற்பத்தி குறைவு!

 

கிராமப்புறங்களில் நுகர்வு இல்லாத காரணத்தினால் உற்பத்தியும் குறைந்துள்ளது.  இரு சக்கர வாகனம், கார் , கனரக வாகனங்கள் ஆகியவற்றின் உற்பத்தி அதிக அளவில் குறைந்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் ஒட்டு மொத்தமாக நுகர்வு என்பதே இல்லாத நிலை உருவாகி உள்ளது.
உற்பத்தி துறை மட்டும் இல்லாமல் சேவை துறையின் வளர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது.
 
4. மின்சாரம்!
 
தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரம் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் குறையவே இல்லை. மின்சார உற்பத்தி செய்யும் அளவு குறையவில்லை. ஆனால், மின்சாரம் வாங்குவதற்கான நிதி வசதி இல்லை. 
 
5. வரி வருமானம் குறைவு!
நாட்டின் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், செலவினங்களைச் சமாளிப்பதற்கும் வரி வருமானம் தேவை. ஆனால், இந்த வரி வருமானம் எதிர்பார்த்தை விடக் குறைந்துள்ளது. 
 
6. குறையும் நம்பிக்கை!
மத்தியில் அமைந்திருக்கும் அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தது. ஆனால் அந்தத் திட்டத்தில் பெரும்பாலான திட்டங்கள் அறிவிப்பு நிலையிலே உள்ளன. இதனால் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பதால் அரசின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. அரசு அறிவித்த எந்தத் திட்டமும் முடியாமலே உள்ளது.
 
7. தொடர் பிரச்னைகள்!
இந்தியாவின் ஜிடிபி குறைந்தற்கு உலக நாடுகளும் காரணம். அதாவது அமெரிக்கா,சீனா, கிரீஸ் என ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பிரச்னை இருந்து கொண்டே இருக்கிறது. அதாவது அந்தப் பிரச்னைகளும் தொடர்ந்து ஒன்றின் பின் ஒன்றாக உருவாகிக் கொண்டே இருக்கிறது." என்றார்.
 
-இரா. ரூபாவதி.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ