Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ. 3,630 கோடிக்கு இரண்டு நிறுவனங்களை வாங்குகிறது சிப்லா

மருந்து துறையில் பிரபல நிறுவனமான சிப்லா அமெரிக்காவில் இருக்கும் இரண்டு நிறுவனங்களை ரூ. 3,630 கோடிக்கு வாங்குகிறது.

மும்பையைச் சேர்ந்த பார்மா நிறுவனமான சிப்லா அமெரிக்காவில் செயல்படும் இன்வாஜென் பார்மா மற்றும் எக்ஸ்எலன் பார்மா  ஆகிய நிறுவனங்களை 550 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 3,630 கோடி ஆகும். கடந்த 2014ல் இந்த இரு நிறுவனங்களின் மொத்த வருமானம் 200 மில்லியன் டாலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கச் சந்தையில் சிப்லா தனது தொழிலைப் பெருக்க இந்த நிறுவனங்களைக் கைப்பற்றியது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP