Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதலீடு, வேலை வாய்ப்புகளை அதிகரிக்க திட்டம்

தமிழகத்தில் முதலீடு மற்றும் தொழிற்துறை மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

 

வரும் செப்டம்பர் 9 மற்றும் 10, இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் பல முக்கிய நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.

 

இந்த ஏற்பாட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா ஆர்வமுடன் முழு ஆதரவு அளித்து வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் 107 பெரிய நிறுவனங்களும், 103 சிறு நிறுவனங்களும் பங்கேற்கின்றன. 


இம்மாநாட்டில், ஐசிஐசிஐ பேங்க் தலைவர் சந்தா கோச்சர், ஹெச் சி எல் நிறுவனர் ஷிவ் நாடார், ஐஓசி தலைவர் அசோக் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

 

அப்போது தொழில் வளர்ச்சி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மொத்தம் 100 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close