Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஷாபோவில் ரூ.665 கோடி முதலீடு செய்கிறது ஸ்னாப்டீல்

ஆன்லைன் வர்த்தகத்தில் வேகமாக வளரும் ஸ்னாப்டீல் நிறுவனம் தனது ஷாபோ செயலியில் மேலும் ரூ.665 கோடி முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.


வர்த்தகத்தின் எதிர்காலம் இனி ஆன்லைன் தான் என்று மாறிக்கொண்டிருக்கும் நிலையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அதற்கான தீவிரமான வேலைகளில் இறங்கியுள்ளன.


அதன்படி ஸ்னாப்டீல் கடந்த ஜூலையில் ஷாபோ செயலியை அறிமுகப்படுத்தியது. சிறு மற்றும் குறு நிறுவனங்களின் வியாபார மேம்பாட்டுக்காகவும், தன்னுடைய ஆன்லைன் வர்த்தகத்தை அதிகரிக்கவும் அறிமுகப்படுத்தியது. இதில் இதுவரை 20,000 சிறு, குறு நிறுவனங்கள் இணைந்துள்ளன.


இப்போது அந்தச் செயலியில் மேலும் ரூ.665 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் குனால் பால் தெரிவித்தார். மேலும் அடுத்த ஒரு வருடத்தில் 10 லட்சம் நிறுவனங்கள் இதில் இணையும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.


இந்தச் செயலி மூலம் தொழில்முனைவோர்கள் தங்களது பொருட்களை எந்தத் தரகு கட்டணமும் இல்லாமல் பதிவேற்றி விற்று கொள்ளலாம்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close