Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்லைன் வர்த்தகம் ஆண்டுக்கு 35% வளர்ச்சி: ஆய்வில் தகவல்

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் அடுத்த ஐந்தான்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 35% வளர்ச்சியடையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.


இந்தியர்கள் இணையத்தில் செலவழிக்கும் நேரம் அதிகரித்து வருவதாகவும், ஆன்லைனில் வர்த்தகம் செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனடிப்படையில் அசோசேம் மற்றும் பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.


பெரும்பாலான இந்தியர்கள், ஷாப்பிங் மால்களுக்குச் சென்று பொருட்கள் வாங்குவதைக் காட்டிலும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்களை வாங்குவதையே விரும்புகின்றனர். இதனால் ஆன்லைன் விற்பனை அதிகரித்து வருகிறது.


2014ல் 4 கோடி பேர் ஆன்லைனில் பொருட்கள் வாங்கியுள்ளார்கள். இந்த எண்ணிக்கை 2015ல் 6.5 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது அடுத்து வரும் வருடங்களில் மேலும் அதிகரிக்கும் என்றும், ஆண்டுக்கு 35% வளர்ச்சி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ