Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உஷார்: ரிசர்வ் வங்கி கவர்னர் பேரிலும் மோசடி

ரூ. 100000000000 இப்படி தலைச்சுத்தும் பூஜ்ஜியங்களுடன் பெரும்பணத்தை நீங்கள் வென்றுள்ளீர்கள் என்று அடிக்கடி மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகள் எல்லோருக்கும் வருவதுண்டு. ஆனால் இப்போது நாட்டின் கருவூலத்தையே நிர்வகிக்கும் ரிசர்வ் வங்கி கவர்னர் பேரிலும் வலம் வர ஆரம்பித்துள்ளதுதான் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.


ரிசர்வ் வங்கியின், அந்நிய செலாவணி பரிமாற்ற துறையில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, rbicustomerunit.in@india.com என்ற மின்னஞ்சலில் இருந்து ரூ. 4,60,00,000 பரிசு விழுந்திருப்பதாகவும் அந்தப் பரிசு தொகையைப் பெற ரூ. 15,000 முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் சொல்லி தவறான மின்னஞ்சல்கள் சிலருக்கு வந்து பீதியடையச் செய்துள்ளது.


ஆனால் இது முற்றிலும் மோசடி நடவடிக்கை என்பதால், அந்தக் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்கள் அனுப்புவதையோ, முன்பணம் செலுத்துவதையோ முற்றிலும் தவிர்ப்பது நல்லது. 


நாணயம் விகடன் வாசகர் ஒருவருக்கு அப்படி வந்த ஒரு மோசடி மின்னஞ்சலை இங்கே காணலாம்.


பரிசுத் தொகை என்று ஆசைக்காட்டி இழுக்கும் மோசடி வலையில் இருந்து உங்கள் பணத்தைப் பாதுகாத்து கொள்ளுங்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ