Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சந்தை இன்னும் இறங்கும்!

 


வாட்ஸ் அப்பில் வந்து சொன்ன ஷேர்லக்!

இன்று சந்தை முடிந்தவுடன் நம் வாட்ஸ் அப்பிற்கு ஷேர்லக் அனுப்பி இருந்த தகவல்கள்!

சந்தை இன்னும் இறங்கும்!


வாரத்தின் முதல் நாளான இன்றே சந்தை ஏறக்குறைய 308 புள்ளிகள் வரை இறங்கி இருக்கிறது. ரூபாய் மதிப்பு குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். இன்றைக்கு மட்டும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 36 காசுகள் இதுவரை குறைந்து, 66.82 ரூபாயாக வர்த்தகம் ஆகிறது. அநேகமாக நாளைக்கு 67 ரூபாய்க்கும் மேலே செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால் நம் தொழில் வளர்ச்சிக்கு பல பாதகமான விளைவுகள் ஏற்படும் என்பதால், சந்தை இறங்கி இருக்கிறது.


சந்தையின் இன்றைய சரிவுக்கு முக்கியமான இன்னொரு காரணம், சீனாவின் தொடர் பொருளாதார சரிவு! ஹாங்செங் இன்டெக்ஸ் இன்று 1.25% குறைந்திருக்கிறது.


சந்தை இப்போது மிகவும் பலவீனமாக இருக்கிறது. குறுகிய காலத்தில் மேலும் இறங்கவே வாய்ப்புகள் அதிகம் என்கிற மாதிரி பேசிக் கொள்கிறார்கள். குறுகிய காலத்தில் சந்தை 7400 புள்ளிகளுக்கு போகலாம். அதற்கும் கீழே செல்லும் பட்சத்தில் 7150 புள்ளிகளுக்குக்கூட போனால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். இது மாதிரியான சமயங்களில் முன்பின் தெரியாத பங்குகளில் முதலீடு செய்வதைவிட நல்ல பங்குகளில் மட்டும் முதலீடு செய்து நீண்ட காலத்துக்கு அதை எடுக்காமல் இருப்பது நல்லது!''



மிகவும் விலை இறங்கிய வங்கிப் பங்குகள்!


இன்றைய சந்தை இறக்கத்தில் மிகவும் விலை பாதிப்படைந்தது வங்கிப் பங்குகள்தான். இன்றைக்கு பிஎஸ்இ பேங்க் இன்டெக்ஸ் 387 புள்ளிகள் குறைந்திருக்கிறது.  கடந்த ஆறு மாதங்களில் பேங்க் இன்டெக்ஸ் 16 சதவிகிதத்துக்கு மேல் குறைந்திருக்கிறது.



ஆட்டோ போர்ட்ஃபோலியோவை மாற்றி அமைத்த எல்.ஐ.சி.!


எல்.ஐ.சி. நிறுவனம் தனது ஆட்டோ போர்ட்ஃபோலியோவை மாற்றி அமைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஏழு ஆட்டோ நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் செய்திருந்த முதலீடு 25% லாபம் அதிகரித்து, 30,799 கோடி ரூபாயாக உள்ளது. மாருதி நிறுவனத்தில் எல்.ஐ.சி. வைத்திருந்த முதலீட்டை 6.63 சதவிகிதிலிருந்து 5.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. மாருதி நிறுவனத்தில் எல்.ஐ.சி. செய்திருந்த முதலீடு 70% லாபமும், அசோக் லேலாண்ட் முதலீட்டின் மூலம் 180 சதவிகிதமும் டிவிஎஸ் மோட்டார் முதலீட்டின் மூலம் 28 சதவிகித லாபமும் கண்டிருக்கிறது.


52 வாரத்தில் குறைந்த விலையைத் தொட்ட மஹிந்திரா அண்ட் மஹிந்திரா!


மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு விலை 52 வாரங்களுக்கும் குறைவான நிலையை அடைந்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அந்த பங்கின் விலை 9% குறைந்திருக்கிறது.இந்த நிறுவனத்தின்  டிராக்டர் விற்பனை   கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 22 சதவிகிதம் வளர்ச்சி குறைந்திருக்கிறது. இதனால் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இந்த பங்கின் விலை சுமார் 21 சதவிகிதம் குறைந்திருக்கிறது.



அபாட் இந்தியா 52 வார உச்சியை அடைந்தது!


அபாட் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை 52 வார உச்சியை அடைந்தது. கடந்த ஒரு மாத காலத்தில் பிஎஸ்இ இன்டெக்ஸ் 10 சதவிகிதம் குறைந்தாலும் இந்த பங்கின் விலை சுமார் 20 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் இந்த பங்கு நிறுவனம் நல்ல ரிசல்ட்டைத் தந்ததே இதற்கு காரணம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ